Saturday 8 June 2024

பார்பர் ரமேஷ் - மூன்றாம் பாகம்

ரமேஷ்: அய்யோ.. நானா? நான் எப்படி வந்தனாவுக்கு அதெல்லாம் பண்ண முடியும்.

வித்யா: எனக்கு புரியுது…. ஆனா உன்னால அவளோட அக்குள்ல மட்டுமாவது எடுக்க முடியும்ல.

ரமேஷ்: கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு. லேடீஸ்கு எப்படி.

வித்யா: பயப்படாத… நீ இங்க ஆம்பளைகளுக்கு எடுத்து விடுவேல… அது மாதிரித் தான்.

ரமேஷ்: ஆனா இதெல்லாம் இங்க லேடீஸ்க்கு பண்ண முடியாது.

வித்யா: ஹாஹா… இங்க பண்ண முடியாதுனு எனக்கும் தெரியும். நீதான் வீட்டிலயும் ஒரு சேர் இருக்குனு சொன்னியே… பேசாம சாயங்காலத்துக்கு மேல நாங்க அங்க வர்றோம். அப்போ பண்ணலாமானு கேட்கதான் அவ சொன்னாள்.

ரமேஷ்: என்னோட ரூம்லயா?



வித்யா: ஆமா…. நாளைக்கு காலையில அவ மறுபடி கிளம்புறாள். சாயங்காலம் டூர்க்கு கிளம்பனுமாம். அப்போ அக்குள்ல முடியோட இருக்கிறது சங்கடமா இருக்குனு நினைக்கிறா.

ரமேஷ்: எனக்கு கொஞ்சம் கூச்சமாதான் இருக்கு. நான் இதுவரைக்கும் லேடீஸ்க்கு இதெல்லாம் பண்ணினது இல்ல.

வித்யா: பயப்படாம இரு… நான் பார்த்துக்கிறேன்.

ரமேஷ்: சரி.

வித்யா: அப்போ நீ சாயங்காலம் வரும்போது இந்த கத்தியையும் பிளாடையும் எடுத்துட்டு வா.

ரமேஷ்: அது ஒண்ணும் பிரச்னை இல்ல… வீட்டிலயும் ஒண்ணு ரெண்டு கத்தி, கத்தரிக்கோல் எல்லாம் இருக்கு.

வித்யா: அப்போ வசதியா போச்சு. வேற எதுவும் தேவைப்பட்டால் அதையும் எடுத்துட்டு வா.

ரமேஷ்: சரி. எடுத்துக்கிறேன்.

வித்யா: அப்போ விக்கிக்கும் உன்னோட வீட்டிலேயே முடி வெட்டலாமா?

ரமேஷ்: உங்க இஷ்டம்… எனக்கு ஓகேதான்.



வித்யா: சரி… அப்போ நாங்க கிளம்புறோம். சாயங்காலம் வீட்டில பார்க்கலாம்.

ரமேஷ்: சரி.

வித்யா: பரவாயில்ல.. நீ நல்லாவே என்னோட முடியை ஜடை பின்னியிருக்க… தாங்க்ஸ்.

ரமேஷ்: ஹாஹா… நான் அவிழ்த்துவிட்ட ஜடையை நானே பின்னி விடுறதுதான நியாயம்.

வித்யா: சரிதான்.. ஆனா அதையும் தாண்டி உனக்கு என்னோட முடி பிடிச்சிருக்குனு நினைக்கிறேன்.

ரமேஷ்: இவ்ளோ நீளமான முடியை தொட்டுப்பார்க்கிறதுனா யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் இவ்ளோ அழகான முடி.

வித்யா: தாங்க்ஸ்….

ரமேஷ்: ஒரு ஒரு சின்ன வருத்தம்தான்.

வித்யா: என்ன.. எனக்கு முடி வெட்ட முடியலைனா?

ரமேஷ்: ஆமா… கொஞ்சம் ஆர்வமா உங்களோட ஜடையை அவிழ்த்து விட்டு உங்களோட முடியை சீவி விட ஆரம்பிச்சுட்டேன்… அட்லீஸ்ட் உங்களுக்கு ட்ரிம் மட்டுமாவது பண்ணி இருந்தா இன்னும் திருப்தியா இருந்திருக்கும்.

வித்யா: கவலைப்படாத.. அதுக்குனு ஒரு நேரம் வரும். அன்னைக்கு என்னோட முடியை உன்கிட்டயே தரேன். இப்போ கிளம்புறேன்.

ரமேஷ்: சரி….

ரமேஷூடன் விளக்கமாக எடுத்து கூறிவிட்டு வித்யா அங்கிருந்து கிளம்பினாள். அவள் போகும்போது அவன் பின்னி விட்ட ஜடையின் அழகை ரசித்துப் பார்த்தான். அவள் கதவை மூடி விட்டு செல்லும் போது ஒரு முறை திரும்பி பார்த்து சிரித்து விட்டு சென்றாள். அவன் மாலை கிளம்பும் வரை அங்கு நடந்தது எல்லாம் அவனுக்கு வியப்பாக இருந்தது. எப்பொழுது மாலை நேரம் வரும் என காத்திருந்தான். மாலை அவன் வீடு வந்து சேர்ந்த போது வாசலில் வித்யா அவளுடைய தலை முடியை விரித்து விட்டு அமர்ந்திருந்தாள். அவள் பின்னால் அமர்ந்திருந்த வந்தனா அவளுடைய தலையை மசாஜ் செய்து கொண்டிருந்தாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த விக்கி ரமேஷை பார்த்ததும் வந்து ஒட்டிக்கொண்டான். 


வித்யா மதியம் முழுவதும் வெயிலில் அலைந்ததால் தலை வலியாக இருக்கிறது என்றதும் வந்தனா அவளுக்கு இப்போது மசாஜ் செய்து கொண்டிருந்தாள். ரமேஷ் எப்போது தயாராக இருந்தாலும் அவர்களை வரச் சொல்லிவிட்டு அவனுடைய வீட்டிற்கு சென்றான். சிறிது நேரத்தில் தூங்க செல்லும் போது போடும் ஒரு டிராக் பேண்ட் மற்றும் டி-சர்ட் மாற்றி விட்டு வாசலுக்கு வந்து தன்னுடைய மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான். வந்தனா ரமேஷ் ஃப்ரீயாக இருப்பதை கவனித்து வித்யாவிடம் இப்போதே செல்லலாமா எனக்கேட்க, வித்யாவும் சரி முதலில் விக்கிக்கு முடி வெட்டிவிடலாம் என இருவரும் ரமேஷின் வீட்டை நோக்கி நடந்தனர்.

ரமேஷ் அவன் வீட்டை நோக்கி வந்த வித்யா மற்றும் வந்தனா இருவரையும் உள்ளே அழைத்தான். உள்ளே நுழைந்த இருவருக்கும் சற்று ஆச்சரியம். ஒரு பேச்சுலர் அரை போல இல்லாமல் மிகவும் நேர்த்தியாக இருந்தது. வித்யா கண்களை சுழல விட்டாள். நிறைய புத்தகங்கள் இருந்தது. டீவீயின் அருகே நிறைய திரைப்பட டிவிடிக்கள் இருந்தன. ஓர் சில ஹேர்ஸ்டைல் பற்றிய புத்தகங்களும் இருந்தன. கடைசியில் அவள் தேடிய பார்பர் சேர் இருந்தது. ஆனால் அவன் கடையில் உள்ளது போல சுற்றி கண்ணாடி எதுவும் இல்லை. வித்யாவும் வந்தனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு ரமேஷிடம் தொடங்கலாமா என்பது போல பார்த்தனர். ரமேஷ் அதை புரிந்து கொண்டவன் போல தான் மாலை கொண்டுவந்த சில பொருட்களையும் தன் அறையிலிருந்து ஒரு சின்ன லெதர் பையையும் எடுத்து வந்தான். அந்த பையின் உள்ளே இரண்டு மூன்று சவரக் கத்திகளும் சில புதிய கத்தரிக் கோலும் இருந்தது. வந்தனா முதலில் அதை கவனித்தாள். கடையில் பார்த்தது போலவே இதிலும் ஒரு வெள்ளை கைப்பிடியுடன் ஒரு சவரக்கத்தி இருந்தது.


வித்யா: முதல்ல விக்கிக்கு முடி வெட்டலாம்.

ரமேஷ்: சரி…

வித்யா: விக்கியை இந்த சேர்ல உட்கார வைக்கலாம்ல…

ரமேஷ்: தாராளமா… ஒரு நிமிஷம் பொறுங்க. ஒரு விஷயத்தை நான் மறந்துட்டேன்.

வித்யா: என்ன?

ரமேஷ்: பொதுவா சின்ன பசங்க உட்காரும்போது உயரம் பத்தாது. அதுனால ஒரு பலகை வச்சுட்டு உட்கார வைப்போம். இங்க அதுமாதிரி எதுவும் இல்ல.

வந்தனா: அய்யோ.. அப்புறம் என்ன பண்றது.

வித்யா: அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. நான் இந்த சேர்ல உட்கார்ந்து விக்கியை என்னோட மடியில உட்கார வைச்சுக்கிறேன்.

வந்தனா: அண்ணி.. நீங்க இந்த சேர்ல உட்கார இவ்ளோ ஆர்வமா இருக்கீங்களே..

வித்யா: பொதுவா லேடீஸ் பார்லர்ல இவனை என்னோட மடியில தான் உட்கார வைப்பேன். இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்ல.

ரமேஷ்: அதுவும் நல்ல யோசனை தான்.

வந்தனா: அப்போ முடி வெட்டும் போது உங்கமேல விழுகாதா?

வித்யா: அடிப்பாவி… கொஞ்சம் யோசிச்சு பாரு… என்னை சுத்தி தான் ஒரு துணி போட்டு இருப்பாங்களே… அப்புறம் எப்படி வெட்டுற முடி என் மேல விழும்.

வந்தனா: அட..ஆமா. ரமேஷ் அண்ணா.. உங்ககிட்ட அந்த துணி இருக்குல?

ரமேஷ்: இருக்கு வந்தனா

வந்தனா: சரி… அண்ணி அப்போ நீங்க உட்காருங்க… ச்சே… நான் என்னோட மொபைலை எடுத்துட்டு வராம போய்ட்டேன்.



வித்யா: எதுக்குடி

வந்தனா: சும்மா தான்… நீங்க இதுல உட்கார்ந்து இருக்கும் போது முடி வெட்டுறதை வீடியோவா எடுத்து வச்சிக்கலாம்னு தான்.

வித்யா: உனக்கு வேற வேளையில்ல… எல்லாத்தையும் வீடியோ எடுத்துக்கிட்டு.

வந்தனா: அதெல்லாம் உங்களுக்கு புரியாது. ஒரு ஜாலி தான். ரமேஷ் அண்ணா உங்க மொபைல் கொடுங்க… நான் வீடியோ எடுத்திட்டு அப்புறமா ட்ரான்ஸ்பர் பண்ணிக்கிறேன்.

ரமேஷ்: சரி.. அங்கிருக்கு எடுத்துக்கோ.

வந்தனா ரமேஷின் மொபைலை எடுத்து ரெக்கார்ட் பண்ண ஆரம்பித்தாள். வித்யா விரிந்து கிடந்த தன்னுடைய தலைமுடியை அள்ளி கொண்டை போட்டாள். வழக்கமாக அவள் போடும் கொண்டை போல இல்லாமல் சற்று தளர்வாகவே போட்டாள். பின்னர் சென்று அந்த பார்பர் சேரில் அமர்ந்தாள். ரமேஷ் அவள் பின்னால் நின்று ஒரு துணியை எடுத்து விரித்து அவள் கழுத்தை சுற்றி வைத்து பின்பக்கமாக முடிச்சு போட்டான். வித்யாவின் கொண்டை கழுத்தின் பகுதியில் இருந்ததால் அவன் கைகள் முடிச்சு போடும் போது அவள் கொண்டையை உரசிக் கொண்டிருந்தன. அதன் பின்னும் ரமேஷ் ஒரு முறை அவள் கொண்டையை தொட்டுப் பார்த்தது வித்யாவிற்கு தெரிந்தது. ரமேஷ் விக்கியை தூக்கி வித்யாவின் மடியில் உட்கார வைத்தான். விக்கியை சரியாக உட்கார வைக்க அட்ஜஸ்ட் பண்ணும் போது வித்யாவின் தளர்வான கொண்டை மெல்ல அவிழ்ந்து சரிந்தது. அவளுடைய நீளமான முடி அப்படியே அந்த துணியின் மேல் விரிந்தது. ஒரு கணம் என்ன செய்வது என ரமேஷ் யோசித்தான்.


அவிழ்ந்த கொண்டையை பற்றி கவலைப் படாமல் விக்கிக்கு முடி வெட்டுமாறு வித்யா கூறினாள். அதை பார்த்துக் கொண்டிருந்த வந்தனா அண்ணியை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள். “அண்ணி… ரொம்ப குனிஞ்சு பார்க்காதீங்க… அப்புறம் ரமேஷ் அண்ணா உங்களோட முடியை வெட்டி விடப் போறாங்க” என்றாள். அவள் கேலியை பொருட்படுத்தாமல் வித்யா சிரித்து விட்டு அமர்ந்திருந்தாள். 


ஆனால் ரமேஷிடம் “முடி வெட்டும் போது என்னோட முடி குறுக்க வந்தா நீயே அதை ஒதுக்கி விட்டு அப்புறம் இவனுக்கு முடி வெட்டு. அவசரப்பட்டு என்னோட முடியை வெட்டி விடாத” என்றாள்.



ரமேஷும் சரி என்று கூறிவிட்டு விக்கிக்கு முடி வெட்ட ஆரம்பித்தான். முதலில் ஒரு ஸ்ப்ரே எடுத்து அவனுடைய தலை முடியில் தெளித்தான். சிறிது தண்ணீர் விரிந்து கிடந்த வித்யாவின் தலை முடியிலும் தெறித்தது. அவள் முடியில் குட்டி குட்டி நீர்த் தீவளைகள் அப்படியே நின்றது அவன் கண்களுக்கு அழகாக இருந்தது. மெல்ல விக்கிக்கு முடி வெட்ட ஆரம்பித்தான். விக்கியுடன் பேசி விளையாட்டு காட்டிக் கொண்டே முடி வெட்டினான். அவ்வப்போது வித்யா அசையும் போது அவளுடைய தலைமுடி குறுக்கே வந்தது. ஆனால் ரமேஷ் கூச்சப்படாமல் இயல்பாகவே அவள் முடியை ஒதுக்கி விட்டு மீண்டும் முடி வெட்ட துவங்கினான். ரமேஷ் ஒவ்வொருமுறை அவள் முடியை கையில் பிடித்து ஒதுக்கி விடும் போதும் வித்யா அதை ரசித்துப் பார்த்தாள். அவன் வெறுமனே ஒதுக்கிவிடாமல், அவள் முடியை கைகளில் எடுத்து கோதி விடுவது போல தூக்கி பின்பக்கமாக போட்டான். சில நேரங்களில் வம்பிழுப்பது போல அவளே தெரியாதது போல தலையை அசைத்து முடியை முன் பக்கமாக விழ வைத்தாள். அது ரமேஷூக்கு புரிந்தது. மனத்திற்குள் சிரித்துக் கொண்டே அவள் முடியை எடுத்து ஒதுக்கி விடுவான். அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களில் ரமேஷ் விக்கிக்கு முடி வெட்டி முடித்திருந்தான். மிகவும் அழகாக இருந்தது. விக்கி கீழே இறங்கியதும் பார்த்த வித்யா மகிழ்ச்சியடைந்தாள். இனிமேல் விக்கிக்கு ரமேஷிடம் முடி வெட்டலாம் என நினைத்தாள்.

ரமேஷ் வித்யாவின் முடியை மொத்தமாக எடுத்து முன்னால் போட்டுவிட்டு அப்புறமாக  அவளுடைய கழுத்தை சுற்றி இருந்த துணியை கழட்டினான். கீழே இறங்கிய வித்யா தன்னுடைய முடியை மீண்டும் கொண்டையாக இறுக்கமாக போட்டாள். முதலில் சென்று விக்கியை குளிக்க வைத்து தூங்க வைத்துவிட்டு அப்புறமாக மீண்டும் வந்தனாவுடன் வருவதாக கூறினாள் வித்யா. 


விக்கியை வைத்துக்கொண்டு வந்தனாவிற்கு ஷேவ் செய்யமுடியாது என அவன் புரிந்து கொண்டான். வந்தனா அப்போது ஒரு யோசனை சொன்னாள். அவள் முதலில் சென்று விக்கியை குளிக்க வைப்பதாகவும், அதுவரை ரமேஷ் வித்யாவிற்கு அவன் கஸ்டமர் போல ஒரு பத்து நிமிடம்  மசாஜ் செய்து விட கூறினாள். வித்யாவிற்கும் அது சரி எனப்பட்டது. பத்து பதினைந்து நிமிடங்களில் வந்து விடுவதாக வித்யா கூறியதை அடுத்து வந்தனா விக்கியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள். போகும்போது ஏதோ சைகை செய்து விட்டு சென்றாள். 

வித்யா மீண்டும் அதே பார்பர் நாற்காலியில் அமர்ந்தாள். ஏனோ அவளுக்கு அந்த நாற்காலி மிகவும் பிடித்து விட்டது. அவள் பின்னால் நின்ற ரமேஷ் அவள் கொண்டையை அவிழ்த்து விடும் முனைப்பில் அவள் தலை முடியில் கை வைத்தான். பழையபடி மீண்டும் அந்த துணியை அவளை சுற்றி போட்டுவிட்டு அப்புறமாக முடியை அவிழ்த்து விடுமாறு வித்யா கூறினாள். சற்று தயங்கினாலும் மறுபடி அவளை சுற்றி துணியை இறுக்கினான் ரமேஷ். ரமேஷ் மசாஜ் செய்யும் போது தெரியாமல் சேலை விலகி தவறாக தோன்றி விடக்கூடாது என்று நினைத்து தான் வித்யா அப்படி சொன்னாள். அது அவளுக்கு கூச்சமில்லாமல் உட்கார சௌகரியமாகவும் இருந்தது.

ரமேஷ் மீண்டும் வித்யாவின் முடியை கொண்டையிலிருந்து அவிழ்த்து விட்டான். அவளின் கனத்த கூந்தல் இப்போது மீண்டும் விரிந்து போர்வைபோல இருந்தது. மிகவும் அருகாமையில் இருந்ததால் அவள் தலை முடியின் வாசம் அவனை ஈர்த்தது. அவன் விரல்களை அவள் தலைமுடிக்குள் வைத்து மெல்ல மசாஜ் செய்ய ஆரம்பித்தான். வித்யா மெல்ல கண்களை மூடி மசாஜ் செய்வதை அனுபவிக்க ஆரம்பித்தாள். வித்யாவின் முடி மிகவும் அடர்த்தியாக இருந்தாலும் மிகவும் மிருதுவாக இருப்பதை ரமேஷ் உணர்ந்தான். வந்தனா மசாஜ் செய்ததைவிட ரமேஷ் மிகவும் பொறுமையாக மற்றும் தெளிவாக செய்வதுபோல இருந்தது. மெல்ல அவளுடைய தலைவலி குறைய ஆரம்பித்தது. ரமேஷ் சற்று அருகே நின்று வித்யாவின் தலை முடியை நுகர்ந்து கொண்டே மசாஜ் செய்து கொண்டிருந்தான். அப்படியே மெல்ல வித்யாவிடம் பேச்சு கொடுத்தான்.



ரமேஷ்: இப்போ தலைவலி எப்படி இருக்கு.

வித்யா: நல்லா குறைஞ்சிருக்கு ரமேஷ். வந்தனா உன்னோட அளவுக்கு மசாஜ் பண்ணலை.

ரமேஷ்: எனக்கு கஷ்டமர்களுக்கு மசாஜ் பண்ணி நல்ல பழக்கம். அவ்ளோதான்.

வித்யா: சரிதான். அதுனால தான் ஒரு நல்ல ஃபீலிங் இருக்கு.

ரமேஷ்: உங்களுக்கு இந்த சேர் ரொம்ப பிடிச்சிருக்கு போல

வித்யா: ஆமாஉட்கார ரொம்ப வசதியா இருக்கு. இது மாதிரி யார் கிட்டயாவது தலை முடியை கொடுத்திட்டு உட்கார்ந்தா நல்லா இருக்கு. உனக்கு எப்படி என்னோட முடி பிடிச்சிருக்கோ அப்படித்தான் எனக்கும் இந்த சேர் பிடிச்சிருக்கு.

ரமேஷ்: நான் அடிக்கடி உங்களோட தலை முடியை பார்த்து ரசிச்சிருக்கேன். ஆனால் இப்படி தொட்டுப் பார்க்க வாய்ப்பு இல்ல. இன்னைக்கு மறுபடி மறுபடி உங்க முடியை தொட்டுப் பார்த்துக்கிட்டே இருக்கேன்.

வித்யா: தெரியும்இந்த துணியை இருக்கினதுக்கு அப்புறமும் என்னோட கொண்டையை பிடிச்சு பார்த்தியேஅப்போவே புரிஞ்சது.

ரமேஷ்: ஹாஹா.. உண்மைதான்ஆனா நீங்களும் மறுபடி மறுபடி விக்கிக்கு முடி வெட்டும் போது தலையை அசைச்சு உங்க முடியை முன்னாடி விழ விட்டங்களேஅதையும் கவனிச்சேன்.

வித்யா: ..அதுவாநீ ஒவ்வொருதடவை என்னோட முடியை எடுத்து போடும் போதும் விளையாட்டா இருந்தது. அதான் அப்படி என்னோட முடியை முன்னாடி விழவிட்டேன்.

ரமேஷ்: சரி எப்போ நிறுத்தனும்னு சொல்லுங்க.. அதுவரைக்கும் உங்களுக்கு மசாஜ் பண்ணிட்டு இருக்கேன்.

வித்யா: உனக்கு தான் என்னோட முடி பிடிச்சிருக்குல அப்படியே தொட்டுப் பார்த்துகிட்டு மசாஜ் பண்ணு…. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

ரமேஷ்: சொல்லுங்க.

வித்யா: இன்னைக்கு நீ வந்தனாவுக்கு அக்குள்ல ஷேவ் பண்றது மட்டும் இல்லஆனால் அதோட அந்த சவரக் கத்தியை எப்படி பயன்படுத்துறதுனு கொஞ்சம் சொல்லிக்கொடு

ரமேஷ்: சொல்லிக் கொடுக்கணுமா? ஏன்?

வித்யா: அக்குள்ல நீ எடுத்து விடுவமேற் கொண்டு சில இடங்கள் இருக்கு... அங்க நாங்க தனியா எடுத்துக்கிறோம்.

ரமேஷ்: .. புரியுது.. சரி சரி

வித்யா: அது மட்டும் இல்லவந்தனா அவளோட பின் கழுத்துலயும் ஷேவ் பண்ணனும்னு சொன்னாள். அப்படி பண்ணினா ரொம்ப வழு வழுணு இருக்கும்னு சொல்றா.

ரமேஷ்: ஆமா.. சிலருக்கு அது ரொம்ப பிடிக்கும்.

வித்யா: அப்போ அங்கயும் ஷேவ் பண்ணிவிடு.

ரமேஷ்: கண்டிப்பா

வித்யா: இன்னொரு முக்கியமான விஷயம். இங்க நடக்கிறது எல்லாம் நம்ம மூணுபேருக்குள்ள இருக்கணும். எக்காரணத்தை கொண்டும் வெளிய போககூடாது. என்னோட மாமியார், வீட்டுக்காரார் உள்பட.


ரமேஷ்: நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன். வந்தனா மொபைல்ல ரெகார்ட் பண்ணிடாம பார்த்துக்கோங்க.

வித்யா: சரி.. அதை நான் பார்த்துக்கிறேன். இப்போ மசாஜ் பண்ணினது போதும்.

ரமேஷ்: சரி



வித்யா: உண்மையை சொல்லணும்னாநீ விக்கிக்கு முடி வெட்டும் போது எங்க என்னோட முடியையும் வெட்டி விடப் போறாயோனு ஒரு சின்ன பயம் இருந்தது.

ரமேஷ்: ஹாஹாஅடிக்கடி உங்க முடி முன்னாடி வந்து விழும் போது ஒரு சின்ன ஆசை வந்தது. அப்படியே உங்க முடியை லைட்டா கட் பண்ற மாதிரி உங்களை பயமுறுத்தலாம்னு. ஆனால் பண்ணலை.

வித்யா: நல்ல வேலை பண்ணலைநீ என்னோட முடியை வெட்ட மாட்டேன்னு சொல்லிட்டா இப்போ கூட நான் பயப் படமாட்டேன். நீ கையில கத்தரிக்கோல் வச்சிருந்தாலும் என்னோட முடியை உன்கிட்ட கொடுத்திட்டு தைரியமா உட்கார்ந்திருப்பேன்.

ரமேஷ்:உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? கோவீச்சுக்க மாட்டீங்களே?

வித்யா: என்ன ரமேஷ்..

ரமேஷ்: எனக்கு உங்க முடி ரொம்ப பிடிக்கும்.. அட்லீஸ்ட் இன்னைக்கு உங்க முடியை ட்ரிம் பண்ணி விட வாய்ப்பு இருக்கும்னு நினைச்சேன். கிடைக்கல. ஒரு தடவை உங்களோட முடியை மொத்தமா அள்ளி முத்தம் கொடுக்கலாமா?

வித்யா: ஹாஹாரமேஷ்.. ரொம்ப குழந்தைதனமா இருக்கஉனக்கு என்னோட முடி அவ்ளோ பிடிச்சிருக்கா?

ரமேஷ்: ஆமாஇன்னைக்கு என்னோட கத்தரிக்கோல் உங்களோட தலை முடில விளையாட முடியல.. அந்த ஒரு சின்ன வருத்தம் தான்.

வித்யா: சரி பண்ணிக்கோ.



ரமேஷ் வித்யாவின் தலை முடியை மொத்தமாக இரு கைகளால் அள்ளினான். ஒரு பெரிய பந்துபோல அவன் கைகளில் அவள் தலை முடி இருந்தது. அவன் முதலில் அள்ளிய கூந்தலின் வாசனையை நுகர்ந்து பார்த்தான். அவள் கூந்தல்மனம் அவன் உணர்ச்சிகளை மிகவும் சீண்டியது



No comments:

Post a Comment