Monday 19 August 2024

வசந்தகாலம் - இரண்டாம் பாகம்

மீண்டும் ஒரு முறை அவன் கத்தரிக்கோலை எடுத்து அவளுடைய முடியை வெட்ட முயற்சி செய்யாமல் இருந்தால் நல்லது என நினைத்தாள். ஆனால் முடியை வெட்டி விட்டாலும் சந்தோசமே என அவள் மனத்திற்குள் நினைத்தாள். பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அலுவலகம் பற்றி திரும்பியது. வசந்த் மனதில் இருந்த குழப்பத்தை தெளிவு படுத்திக்கொள்ள நினைத்தான்.

வசந்த்: ரம்யா… உன்கிட்ட ஒண்ணு கேட்பேன்… தப்பா நினைக்காத..

ரம்யா: என்ன சீனியர்.. என்னோட முடி வேணுமா?

வசந்த்: ச்சே..ச்சே… அதெல்லாம் இல்ல… இது வேற ஒண்ணு..

ரம்யா: சரி… சொல்லுங்க சீனியர்.

வசந்த்: முதல்ல.. சீனியர்-னு கூப்பிடுறத நிறுத்து… வசந்த்-னு பேர் சொல்லி கூப்பிடு…

ரம்யா: அது கஸ்டம் சீனியர்…. இவ்ளோ நாளா உங்களை நான் சீனியர்-னு தான கூப்பிடுறேன்..



வசந்த்: நான் என்ன உன்னை எப்பொவும் ஜூனியர்-னா கூப்பிடுறேன். ரம்யானு உன்னோட பேரை சொல்லித்தான கூப்பிடுறேன்…

ரம்யா: உங்களுக்கு என்னைவிட வயசு அதிகம் நீங்க என்னை அப்படி கூப்பிடலாம்.. நான் அதே மாதிரி பேர் சொல்லி கூப்பிட முடியுமா?

வசந்த்: நீ பேருக்கு தான் படிச்ச பொண்ணு… இன்னும் உன்னோட கிராமத்து புத்தி மாறல… வேலைக்கு வந்ததுக்கு அப்புறமாவது கொஞ்சம் மாறணும்…

ரம்யா: நான் முயற்சி பண்றேன்… நீங்க ஏதோ கேட்கணும்னு சொன்னீங்களே… அதை கேளுங்க…

வசந்த்: சரி. சொல்றேன்… நம்ம ஆஃபீஸ்ல நந்தினி இருக்கா-ல… அவ எப்படி..

ரம்யா: என்ன சீனியர்… அவளோட ஜடையையும் கவனிச்சீங்களா….?  அடுத்து அவளோட ஜடையை வெட்டலாம்னு பார்க்கிறீங்களா?…

வசந்த்: இதே மாதிரி பேசிட்டு இருந்தேனா.. முதல்ல உன்னோட ஜடையை தான் வெட்டப்போறேன்.

ரம்யா: ஹாஹா… இப்போலாம் நான் பயப்பட மாட்டேன்… வேணும்னா வெட்டிக்கோங்க…

வசந்த்: நீ வீட்டுக்கு வா.. உன்னோட ஜடையை வெட்டி விடுறேன்.

ரம்யா: சரி.. சரி… கோவப்படாதீங்க… நந்தினியை பத்தி என்ன தெரியணும்…?

வசந்த்: பொதுவா… அவ எப்படினு சொல்லு..

ரம்யா: எனக்கு தெரிஞ்சு இங்க ஒரு ஐஞ்சு வருஷமா இருக்கா…போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு… அதுவும் அவளுக்கு பிடிக்காம… அவ ஜாதகத்துல ஏதோ பிரச்னையாம்…. நாலு வருஷமா கல்யாணம் ஆகாம கடைசியில சொந்தக்கார பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. இப்போ அவ புருசனுக்கு வேலை இல்லையாம்.

வசந்த்: இதுக்கு தான் பொண்ணுங்க கிட்ட எதையுமே கேட்கிறது இல்ல… நான் என்ன அவளோட சொந்த கதையவா கேட்டேன்.



ரம்யா: வேற என்ன வேணும்?

வசந்த்: ஆபீஸ்ல அவ எப்படி?

ரம்யா: ஆபீஸ்லயா… ரொம்ப நல்லா வேலை பார்ப்பா… போன வருஷம் Accounting section-ல ரெண்டு பேரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க… ஆனா இவ நல்லா வேலை செய்யுறான்னு ப்ரோமோசன் கொடுத்தாங்க….

வசந்த்: நம்பிக்கையான ஆளா?

ரம்யா: அப்படித்தான் தோணுது….

வசந்த்: நம்ம Inventory in-charge & Coordinator பார்த்திபன் எப்படி…

ரம்யா: அந்த ஆளா.. ஏன் அவரைப்பத்தி கேட்குறீங்க?

வசந்த்: காரணமாதான். சொல்லு..

ரம்யா: ரொம்ப கெடுபிடியான ஆளு… வேலையில ரொம்ப சரியா இருப்பாரு…                           

வசந்த்: வேற…

ரம்யா: அவர்மேல ஒரு வதந்தி இருக்கு….. அவர்க்கு பெண்கள்கிட்ட கொஞ்சம் சபலம் இருக்குனு…


வசந்த்: உண்மையாவா?


ரம்யா: எனக்கு ஷைலஜா அக்கா தான் சொன்னாங்க… அந்த ஆள் கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு… அதுனால அவர்கிட்ட பேசுறதே இல்ல… தவிர எனக்கும் அவர் Section-க்கும் வேலை இல்ல. ஆனா இப்போலாம் மனுசன் அடிக்கடி அந்த நந்தினிகிட்ட வந்து கடலை போடுவாரு…. ஒருவேளை அவருக்கும் நந்தினியோட நீளமான தலைமுடி பிடிக்குமோ என்னவோ…     கடைசில கொஞ்சம் கொசுறு செய்தி… அவரை விட அவர் மனைவிக்கு பத்து வயசு கம்மி…ஹிஹி..


வசந்த்: சரி..சரி.. போதும்…. உன்னை பேசாம உளவுத்துறைல சேர்த்திடலாம் போல…

ரம்யா: பொண்ணுங்க எல்லாருமே உளவாளிகள் தான்… அவங்களுக்கு தெரியாம எதுவும் நடக்காது…




வசந்த்: அது என்னவோ உண்மைதான்.


வசந்த், ரம்யா இருவரும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தனர். ரம்யா முதன் முதலாக அங்கு வருகிறாள். நல்ல விசாலாமாக இருந்தது. அவனுடைய தகுதிக்கு ஏற்ற பெரிய வீடாக இருந்தது. ஆங்காங்கே அவனுடைய துணிகள், படித்த புத்தகங்கள், சாப்பிட்ட பாத்திரங்கள் என பேச்சுலர் வீடு என்பதை உறுதி செய்தது. ரம்யா இதெல்லாம் நோட்டமிடுவதை கவனித்த வசந்த், வீட்டில் உள்ள நிலைமை தெரியாமல் அவளை அழைத்து வந்து விட்டோமோ என யோசித்தான். பின்னர் ரம்யா அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. வசந்த் தன்னுடைய உடையை மாற்றிக் கொண்டு வந்தான். ரம்யா மிகவும் பசியாக இருப்பதாக கூறியதும், ஆர்வமாக இருவருக்கும் சேர்த்து ஒரு காஃபீ போட்டான். காஃபீ மிகவும் சுமாராகவே இருந்தது. வசந்த் எதையும் யோசிக்காமல் மடமடவென குடித்துவிட, ரம்யா மிகவும் கஷ்டப்பட்டு குடித்தாள். வசந்த் இப்படித்தான் தன்னுடைய பேச்சுலர் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறான் என அவளுக்கு புரிந்தது. இருவரும் இணைந்து மறுபடி பழைய கதை  பேச துவங்கினர்.


இருவருமே, மற்றவர் மேல் சில வித்தியாசங்களை உணர்ந்தனர். ரம்யா வசந்த்திடம் பொறுமையும், பொறுப்பும் அதிகரித்து இருப்பதை கவனித்தாள். தான் உடுத்தும் உடையில் இருந்து அனைத்திலும் நிறைய மாறி இருக்கிறான். பேசும்போது சற்று கனிவு அதிகரித்து இருக்கிறது. அதிக நண்பர்கள் இல்லாமல் ஒரு நட்பை தேடுவது போல தெரிந்தது. வசந்த் ரம்யாவிடம் நிறைய கவனித்தான். கல்லூரியில் அவனிடம் பயந்து பேசுபவள் இப்போது மிகுந்த தைரியத்துடன் இருக்கிறாள், தைரியமாக பேசுகிறாள். மிகவும் சின்ன பெண்ணாக தெரிந்தவள், இப்போது பக்குவப்பட்ட இளங்குமரியாக மாறி விட்டாள். கல்லூரியில் சுடிதார் அணிந்து வருவாள். இப்போது அலுவலகத்தில் புடவை அணிந்து வருகிறாள்.


அவளுடைய தலைமுடி மட்டுமே இன்னமும் மாறவில்லை. அதே நீளமான முடியை பாராமரிக்கிறாள். முன்னைவிட சற்று நீளமான முடியாக தோன்றியது. முகத்திலும் அழகு சற்று அதிகமாக இருப்பதாக தோன்றியது. ஒருவேளை இருவருடைய வயதுக்கு ஏற்ற எதிர்பாலின ஈர்ப்பாக கூட இருக்கலாம். ஆனால் வசந்த் ரம்யாவை ரசித்தான்.


நேரம் கடந்தது. ஷைலஜா இன்னமும் வருவது போல இல்லை. இருவருக்குமே பசிக்க ஆரம்பித்தது. மறுபடி எங்கே வசந்த் சமைக்க ஆரம்பித்து விடுவானோ என பயந்த ரம்யா, அவளே சமைப்பதாக கூறினாள். சமயலறை புதிது என்பதால், வசந்த்தை அழைத்து எந்தெந்த பொருட்கள் எங்கிருக்கிறது என கேட்டுக்கொண்டாள். அவள் சமைக்கும் வரை வசந்த் அங்கேயே அவளுடன் நின்றிருந்தான். அவள் பின்னால் நின்று அவள் பின்னழகையும், பின்னல் அழகையும் ரசித்தான். மீண்டும் அவளுடைய தலைமுடியை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என யோசித்தான். அவள் அனுமதியில்லாமல் தலை முடியை தொட்டால் கோவித்துக் கொள்வாளோ என தயங்கினான். அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் ரம்யா மெதுவாக கேட்டாள்.


ரம்யா: என்ன சீனியர்.. என்னோட முடியை சைட் அடிக்கிறீங்களா?

வசந்த்: இன்னமும் நீ என்னை சீனியர்னு தான் கூப்பிடுற..

ரம்யா: ஸாரீ… மாத்திக்க முயற்சி பண்றேன்…

வசந்த்: சரி.. இப்போ முயற்சி பண்ணு…

ரம்யா: இப்போவா… எனக்கு கூச்சமா இருக்கு…

வசந்த்: இங்க வேற யாரும் இல்லையே…  பயப்படாத…

ரம்யா: சரி வசந்த்… இனிமேல் இப்படியே கூப்பிடுறேன்…

வசந்த்: வெரி குட்…

ரம்யா: சரி.. இப்போ சொல்லுங்க… நீங்க என்னோட முடியை தான… சைட்  அடிச்சீங்க…

வசந்த்: ஆமா…

ரம்யா: இன்னமும் நீங்க என்னோட முடியை வைச்சு என்னை வம்பிழுக்கிறத நிறுத்த மாட்டீங்களா?

வசந்த்: நீ இன்னமும் அதே நீளமான முடியோடதான இருக்க…

ரம்யா: ஆமா… எனக்கு பிடிச்சிருக்கு…. அதான் நான் இன்னமும் நீளமான முடியை வச்சிருக்கேன்.

வசந்த்: எனக்கும் உன்னோட முடி பிடிச்சிருக்கு.. அதான் சைட் அடிக்கிறேன்.

ரம்யா: அப்புறம் ஏன் எப்போவுமே என்னோட முடியை கட் பண்ணப் போறேன்னு சொல்லுவீங்க.

வசந்த்: ஏன்னா எனக்கு அதுவும் பிடிக்கும்.

ரம்யா: அதெப்படி ரெண்டுமே பிடிக்கும்.

வசந்த்: அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது..

ரம்யா: பரவாயில்ல சொல்லுங்க…புரிஞ்சுக்க  முயற்சி பண்ணுறேன்.

வசந்த்: சரி.. இப்போ வேணாம் இன்னொரு நாள் சொல்றேன்.


ரம்யா: ஏன் இப்போ என்னாச்சு?

வசந்த்: இன்னும் கொஞ்ச நேரத்துல ஷைலஜா வந்திருவாங்க… அதான் சொல்றேன்..

ரம்யா: சரி பார்க்கலாம் எப்போ சொல்றீங்கனு..

வசந்த்: உனக்கு ஞாபகம் இருக்கா… காலேஜ் கடைசி நாள்ல உன்னோட முடியை அவிழ்த்து விட்டேனே..

ரம்யா: மறக்க முடியுமா… என்னோட முடியை மொத்தமா வெட்டுறதுக்கு ஒரு கத்தரிக்கோலை எடுத்துட்டு வந்தீங்களே…

வசந்த்: இப்பொவும் அதே மாதிரி உன்னோட முடியை என்கிட்ட தருவியா?

ரம்யா: எதுக்கு… அன்னைக்கு வெட்டாம விட்ட என்னோட முடியை இப்போ வெட்டிவிடலாம்னு பார்க்குறிங்களா?

வசந்த்: உனக்கு சம்மதம்னா அதையும் செய்யலாம்… ஆனால் எனக்கு உன்னோட ஜடையை பார்த்ததில இருந்து மறுபடி உன்னோட முடியை என் கையாள அவிழ்த்து விடலாம்னு தோணுது..

ரம்யா: ஆசையப்பாரு…

வசந்த்: நிஜமா.. ரம்யா… உன்னோட முடியை எடுத்துக்கவா..

ரம்யா: எடுத்துக்கோங்க ஆனால் அவிழ்த்துவிட வேணாம். ஒருவேளை ஷைலஜா அக்கா வந்திட்டா அப்புறம் தப்பா நினைப்பாங்க… அவங்களுக்கு நான் உங்களோட காலேஜ் ஜூனியர்னு இன்னும் தெரியாது…

வசந்த்: நீ இன்னும் ஆபீஸ்ல யார்கிட்டயும் நான் உன்னோட சீனியர்னு சொல்லலயா?

ரம்யா: இல்ல… எதுக்கு தேவையில்லாம வதந்தியை கிளப்பனும்னு சொல்லல..

வசந்த்: இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பும் போது என்னை சீனியர்னு கூப்பிட்டயே..

ரம்யா: அப்போ தான் ஆபீஸ்ல யாரும் இல்லையே…

வசந்த்: நந்தினி அங்கதான் இருந்தாள்… கவனிக்கலையா?

ரம்யா: அய்யோ இல்லையே…

வசந்த்: அப்போ சீக்கிரம் வேற ஏதாவது வதந்தி பரவும்ணு நினைக்கிறேன்.

ரம்யா: சும்மா  இருங்க வசந்த்.. அவ வேற ஒரு மாதிரி…

வசந்த்: சரி விடு பார்த்துக்கலாம்.

ரம்யா: அவ மட்டும் எதையாவது கிளப்பி விடட்டும், அப்புறம் பார்த்துக்கிறேன்.

வசந்த்: என்ன பண்ணுவ?

ரம்யா: அவ ஜடையை அப்படியே கட் பண்ணி விட்றுவேன்.

வசந்த்: என்ன நீயும் என்ன மாதிரி ஆரம்பிச்சுட்ட… ஜடையை கட் பண்ணப் போறேன்னு…

ரம்யா: உங்களோட சேர்ந்து எனக்கும் அப்படி தோணுது.. அவளோட ஜடையை கட் பண்ணி விட்டாலும் தப்பு இல்ல… அவளுக்கு அது தேவை தான்.

வசந்த்: சரி சரி… ரொம்ப கோவப்படாத… இப்படி உட்காரு…

ரம்யா: இங்க வேணாம்.. அந்த பால்கனில உட்காராளமா…

வசந்த்: தாராளமா.

இருவரும் சென்று அங்கு அமர்ந்து இரவு உணவு அருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். கல்லூரி, கூந்தல், அலுவலக கதைகள் என சுவாரசியமாக போய்க் கொண்டிருந்தது. சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து பால்கணியில் அமர்ந்து ரம்யா, இரவுநேர நகரத்தின் ஒளி விளக்குகளை ரசித்துக் கொண்டிருந்தாள். கை கழுவி விட்டு வந்த வசந்த் அவள் பின்னால் நின்று அவளுடைய தலைமுடியை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தான். அவள் அருகில் சென்று அவளுடைய ஜடையை கையில் எடுத்தான். இந்தமுறை அவன் ரம்யாவின் சம்மதத்தை கேட்கவில்லை. ரம்யாவும் அவன் அவளுடைய தலைமுடியை கையில் எடுப்பதை கவனித்து அவனுக்கு ஒத்துழைப்பு தருவது போல பின்னால் சாய்ந்து அமர்ந்தாள்.


அவள் கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து ஜடையை பிடித்து மெல்ல வருட ஆரம்பித்தான். அவளுடைய தலை முடியின்மேல் அவன் விரல்கள் படுவது சற்று கூச்சமாக இருந்தது. ரம்யா கூச்சத்தில் சற்று நெளிந்தாள். வசந்த் அவ நெளிவதை ரசித்துக் கொண்டே அவளுடைய ஜடையை கையில் எடுத்து முத்தம் கொடுத்தான். ரம்யா அதை எதிர்பார்க்கவில்லை. அமைதியாக இருந்தாள். அவளுடைய ஜடையை அவிழ்த்து விட எண்ணி அவள் ஜடையின் கீழ்பகுதியில் இருந்த ரப்பர் பேண்ட்-ஐ கழட்டி விட நினைத்தான். அப்போது காலிங் பெல் அடித்தது.






No comments:

Post a Comment