இனி அகல்யாவின் பார்வையில்…
என் மகன் பாலா இல்லாமல் எனக்கு ஏதோ போல இருந்தது. வீட்டில் எப்போதும் எனக்கு உதவியாக, கலகலப்பாக இருப்பான். இப்போது அவன் அறையில் சூரஜ் தங்கியிருக்கிறான்.
சூரஜ் பாலா போல வெளிப்படையாக பேசாமல் இருப்பது எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஆனால், பாலா இந்நேரம் கண்டிப்பாக பிருந்தாவுடன் நன்றாக பழகியிருப்பான் என நம்புகிறேன். இந்த சூரஜ்ஜை, அவனுடைய சொல்வதுபோல கொஞ்சம் மாற்ற வேண்டும் என எனக்கு தோன்றுகிறது. ஆனால், எப்படி அவனிடம் ஆரம்பிப்பது என எனக்கு தெரியவில்லை. இந்நேரம் பாலா இங்கிருந்தால் எனக்கு வசதியாக இருந்திருக்கும். அந்த யோசனையுடன் பாலாவிற்கு மேசேஜ் செய்தேன்.
என் மகனிடம் பேசியபின் சூரஜ் விஷயத்தில் என்ன செய்யலாம் என எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்தது. ஆனால், பாலா பிருந்தாவின் தலைமுடியை பற்றி சொல்லும் போது எனக்கு கொஞ்சம் பொறாமையும் வந்தது. எனக்குத் தெரியும் பிருந்தாவின் தலைமுடி, என்னுடைய தலைமுடி போல இல்லாமல் இருந்தாலும், நல்ல அடர்த்தியாக நீளமாக இருக்கிறது. ஆனால், என்னுடைய மகன் இப்போது முதல் முறையாக என்னை தவிர்த்து இன்னொரு பெண்ணின் தலைமுடியை ரசிப்பதாக என்னிடம் கூறுவது எனக்கு புதிதாக இருந்தது.
என்னுடைய அறைக்கு சென்றேன். கண்ணாடியில் என்னுடைய முடியை எடுத்து முன்னால் போட்டு பார்த்தேன். என்னுடைய முடி என் இடுப்பு வரையில் இருந்தது. சிறு வயதில் இருந்தே எனக்கும் நீளமான தலைமுடி தான் இருந்தது. பின் கல்யாணம், குழந்தை என ஆன பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக என் முடியின் நீளம் குறைய ஆரம்பித்தது. நானும் அவ்வப்போது என்னுடைய முடியின் நீளத்தை எனக்கு பிடித்தது போல ஒரு இன்ச், இரண்டு இன்ச் என அவ்வப்போது வெட்டிக் கொள்வேன். என் முடியின் நீளத்தை குறைவாக வைத்திருப்பதால் என்னால், நன்றாக Maintain பண்ண முடிகிறது.
சமீப காலமாக என் மகன் பாலா என் முடியை சில நேரங்களில் வீட்டிலேயே Trim பண்ண எனக்கு உதவுவான். அப்போதெல்லாம் அவன் என்னுடைய முடியை பற்றி என்னிடம் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் தலைமுடியை அவன் கையில் எடுத்து பிடித்திருக்கும் போதெல்லாம் எனக்கு ஆறுதலாக இருக்கும். சில சமயங்களில் அவன் என்னுடைய முடியை பற்றி ஏதாவது சொல்லிவிட்டு, என் முடியை எடுத்து நுகர்ந்து பார்த்து முத்தம் கொடுப்பான். அப்போதெல்லாம், நான் அவனுடைய அம்மா என்பதை மறந்து, ஏதோ நான் அவனுடைய பிள்ளை போல என் முடியை கொஞ்சி மகிழ்கிறான் என எனக்கு தோன்றும். காரணம், என் முடியை இதுபோல உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தது என்னுடைய அம்மா மட்டும்தான். அதன் பின் பாலாதான் என் முடியை கொஞ்சியிருக்கிறான்.
மனதின் ஓரத்தில் அது ஓடிக் கொண்டிருந்தாலும், இப்போது சூரஜ் என்ன செய்கிறான் என பார்க்க சென்றேன். அறையில் தனியாக உட்கார்ந்து தன்னுடைய செல்போனை நோண்டிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.
பாலா என்னிடம் பிருந்தாவின் முடியை பற்றி சொன்ன போது ஏனோ எனக்குள் ஒரு சின்ன பொறாமை வந்தது.

No comments:
Post a Comment