Tuesday, 18 November 2025

புதிய அனுபவம் - ஐந்தாம் பாகம்

மலைப்பிரதேசத்தின் குளிர் என்னை கொஞ்சம் ஆச்சரியப் படுத்தியது. பிருந்தா தயாராக வைத்திருந்த சால்வையை எடுத்து போர்த்திக்கொண்டாள். அவளுடைய ஜடை என்னுடைய கண்களில் இருந்து மறைந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு பிருந்தாவின் வீட்டிற்கு சென்றோம். பிருந்தா களைப்பாக இருப்பதால், செல்லும் வழியில் இரவு உணவை பார்சல் வாங்கிக்கொண்டோம். வீட்டிற்கு வந்ததும், பிருந்தா நான் தங்குவதற்கு சூரஜ்-ன் அறையை காட்டினாள். சூரஜ் ஏற்கனவே காட்டியிருந்த போட்டோக்கள் போலவே இருந்தது.

“பாலா, உனக்கு எங்க வீடு பிடிச்சிருக்கா?”



“சூப்பரா இருக்குAunty “

“சரி.. உனக்கும் Travel பண்ணி வந்தது Tired-ஆ இருக்கும். நல்லா தூங்கு. எதுவும் வேணும்னா என்கிட்ட கேளு”

“கண்டிப்பா.. நீங்களும் நல்லா Rest எடுங்க Aunty”

“ரொம்ப தாங்க்ஸ் பாலா…நீ ரொம்ப Help பண்ணியிருக்க இன்னைக்கு”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… இதுக்கெல்லாம் Thanks சொல்லிட்டு இருக்கீங்க”

“இந்நேரம் சூரஜ் இருந்திருந்தா என்னை திட்டியிருப்பான்”

“எதுக்கு?”

” Hill Station-ல இருந்துட்டு, இப்படி Travel பண்ணும்போது Vomit பண்ணிட்டு இருக்கியேன்னு”

“ஓ..”

“அப்புறம் இன்னொரு விஷயம், இதை சூரஜ்கிட்டயும் உன்னோட அம்மாகிட்டயும் சொல்லாத டா. ப்ளீஸ். என்னோட மானமே போயிடும்”

“சரி Aunty. எதையும் சொல்ல மாட்டேன்”

அதன் பின் நான் தூங்க சென்றேன். புது இடம் என்பதால் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஆனால் வரும் வழியில் வெற்றிகரமாக பிருந்தாவின் தலைமுடியை தொட்டுப் பார்த்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. தவிர, அவள் வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்துக் கொள்ள சொன்னது எனக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. பிருந்தாவின் அடர்த்தியான ஜடையை என் கையில் பிடித்துப்பார்த்தது இன்னனும் எனக்குள் கிளர்ச்சியாக இருந்தது. அதே நினைவுகளுடன் மேலும் அவளுடைய முடியை எடுத்து விளையாடுவதுபோல கற்பனை செய்துகொண்டே படுக்கைக்கு சென்றேன்.

———————



பிருந்தாவின் பார்வையில்…

என் மகன் சூரஜ்ஜை அகல்யா வீட்டில் விட்டு விட்டு பாலாவை என்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்பினேன். பாதுகாப்பான ஒரு இடத்தில் சூரஜ்ஜை விட்டு செல்கிறேன். இதுபோல நானும் பாலாவை கவனித்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டே கிளம்பினேன். பேருந்தில் எறியதும் சிறிது நேரம் பேசிக் கொண்டே வந்தோம். எனக்கு பாலாவுடன் பேசிக்கொண்டு வருவது பிடித்து இருந்தது. நான் பேசும்போது என்னை Judge பண்ணாமல் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறான் என புரிந்து கொண்டேன். மலைப்பாதை நெருங்க, நெருங்க என் மனதில் ஒரு பயம் வந்தது. என்னுடைய Motion Sickness-ஐ நினைத்து எப்படியாவது Vomit பண்ணாமல் இருக்க நினைத்து, பேச்சை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டு மெல்ல கண்ணயர்ந்தேன்.

பேருந்து உலுக்கிய போது தான் பாலாவின் தோளில் சாய்த்து உறங்கியத்தை உணர்ந்து அவனிடம் மன்னிப்பு கேட்டேள். ஆனால், அவன் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோல இருந்தான். ஆனால், விதி வலியது. எது நடக்கக்கூடாது என நினைத்தேனோ, அது நடந்து விட்டது. தேநீருக்காக நிறுத்திய போது Control பண்ண முடியாமல் Vomit செய்துவிட்டேன்.

ஆனால், நான் எதிர்பாராமல், பாலா அவள் பின்னாலேயே வந்து நின்று என் தலையை பிடித்துக் கொண்டு உதவி செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே இடத்தில் சூரஜ் இருந்திருந்தாலும் கண்டிப்பாக உதவி செய்வான். ஆனால், கூடவே என்னை திட்டிக் கொண்டும் இருந்திருப்பான். ஆனால், பாலா பொறுமையாக கையாண்டது அவனுடைய பக்குவத்தை எனக்கு புரிய வைத்தது.



வீடு வந்து சேரும் வரை பாலா எனக்கு உறுதுணையாக இருந்தான். இப்போது அவனை சூரஜ் அறையில் விட்டுவிட்டு வரும்போது கூட என்னை Rest எடுக்கும் படி வலியுறுத்தி அனுப்பியது எனக்கு ஆறுதலாக இருந்தது. என் அறைக்கு வந்து உடைகளை மாற்றிக் கொண்டு, அங்கிருந்த கண்ணாடி முன் சென்று அமர்ந்தேன. எனக்கு என்னுடைய தலைமுடியை பராமரிப்பது மிகவும் பிடிக்கும். கண்ணாடி முன் அமர்ந்து என்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டேன். கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டே என் ஜடையை தடவிப் பார்த்தேன். சட்டென எனக்கு பேருந்தில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

பேருந்தில் முதலில் மடியில் படுத்துக் கொள்ள பாலா வழியுறுத்திய போது வேண்டாம் என மறுத்துவிட்டு, பின்னர் Vomit செய்த பின் சற்று தயக்கத்துடன் பாலாவை கேட்டபோது, அவன் எந்த Egoவும் பார்க்காமல் சம்மதம் சொன்னான். கொஞ்சம் மனதில் தயக்கம் இருந்தாலும், பின்னர் அவன் மடியில் வைத்திருந்த Beg மேல் தலைவைத்து படுத்துக் கொண்டேன். அப்போது நான் எதிர்பாராமல் இருக்கும் போது மெல்ல என்னுடைய தலைமுடியை பாலாவின் விரல்கள் வருடிக்கொடுக்க ஆரம்பித்தது. அப்போது தான் நான் கொஞ்சம் நிம்மதியாக உணர ஆரம்பித்தேன். ஒருவேளை பாலா நான் Vomit செய்ததை பார்த்து என்னை தப்பாக நினைத்துக் கொண்டிருப்பானோ என நினைத்த எனக்கு, அவன் என்னை கவனித்துக் கொள்கிறான் என புரிந்து கொண்டேன்.



என்னை அறியாமல் மெல்ல எனக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. அப்போது என்னுடைய ஜடையை முன்னால் பிடித்துக் கொண்டே இருக்க சற்று அசௌகரியமாக இருப்பதாக மனதிற்குள் நினைக்க, பாலா என்னிடம் இருந்து ஜடையை வாங்கி பின்னால் போட்டு விட்டான். அவன் உரிமையாக அப்படி செய்தது எனக்கு பிடித்து இருந்தது. ஆனால் சில நிமிடங்கள் கழித்து பாலா என் ஜடையை பிடித்துப் பார்க்கிறான் என எனக்கு தெரிந்தது. நான் தூங்கிவிட்டதாக நினைத்து அவனுடைய கைகள் என்னுடைய ஜடையை தடவிப் பார்த்துக் கொண்டே வந்து, என் ஜடையை கழுத்தருகில் பிடித்தான். அப்போது எனக்கு கொஞ்சம் கூச்சம் இருந்தது.




ஆனால், அவன் மடியில் படுத்துக் கொண்டு இருக்கும் போது, என்மேல் கைகளை வைத்துக் கொள்ள முடியாமல், என்னுடைய முடியை தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். உண்மையில் பாலா என்னுடைய ஜடையை பிடித்துப் பார்த்த போது எனக்கு இதமாக இருந்தது. இதுபோல என்னுடைய ஜடையை யாரும் தொட்டுப் பார்த்தது இல்லை. பாலா மேல எனக்கு ஒரு பாசம் வந்தது. ஊருக்கு செல்லும் வரை, பாலா என்னுடைய தலைமுடியை என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் அமைதியாக தூங்க ஆரம்பித்தேன். அதன் பின் பாலா என்னுடைய ஜடையை என்ன செய்து கொண்டிருந்தான் என எனக்கு தெரியவில்லை.

அதையெல்லாம் நினைத்துக் கொண்டே என்னுடைய ஜடையை பார்த்தேன். இப்போது என் முடியை பார்க்கும் போது ஏனோ பாலாவே நினைவிற்க்கு வந்தான். என்னையும் அறியாமல் என்னுடைய உதட்டில் புன்னகை மலர்வதை கண்ணாடியில் பார்த்தேன். பாலா என்னுடைய முடியை தடவியத்தை நினைக்கும் போது எதற்காக சிரிக்கிறேன் என எனக்கே தெரியவில்லை. மெல்ல என் ஜடையை அவிழ்த்து விட ஆரம்பித்தேன். என்னுடைய சுருள் முடியை மெல்ல விரித்து விட்டேன். என்னுடைய விரித்துவிட்ட தலைமுடி ஒரு குழந்தை போல என் மடியில் விழுந்தது. சீப்பு எடுத்து என்னுடைய முடியை சீவிவிட ஆரம்பித்தேன். பொறுமையாக என்னுடைய தலைமுடியை சீவி முடித்த பின்னர் படுக்கைக்கு சென்றேன்.

 ——————— 

பாலா தன்னுடைய முதல் முயற்சியில் வெற்றி கண்டான். பிருந்தாவின் தலைமுடியை தன் கையால் தொட்டுப் பார்த்துவிட்டான். அதோடு அவளுடைய ஜடையை கையில் எடுத்து பிடித்துப் பார்த்தும் விட்டான். இப்போது பிருந்தா பாலாவை நம்பிக்கையாக பார்க்க ஆரம்பித்திருந்தாள். அவளுக்கும் தன்னுடைய தலைமுடியை பார்க்கும் போது ஏதோ ஒரு விதத்தில் பாலா நினைவிற்கு வந்தான். மறுநாள் பாலா காலையிலேயே எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான். பொதுவாக சூரஜ் இதுபோல இருப்பது இல்லை. ஆனால் பாலா வெளியில் வந்து பிருந்தாவிடம் எதுவும் வீட்டு வேளையில் உதவி வேணுமா என கேட்டுக் கொண்டான். அதுபோல, தான் தங்கியிருக்கும் அறையை நன்றாக வைத்துக் கொள்வதை கவனித்த பிருந்தாவிற்கு அவன் மேல் ஒரு தனி அபிப்ராயம் வந்தது. அவளை ஏற்கனவே நன்றாக impress செய்திருந்த பாலா, இப்போது அவள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தான்.

சூரஜ் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. பாலா போல இல்லாமல் கொஞ்சம் அமைதியாகவே இருந்தான் சூரஜ். அகல்யாவும் அதை கவனித்து இருந்தாள். ஏற்கனவே பிருந்தா சூரஜ்ஜை பற்றி கொஞ்சம் கூறியிருந்தாள். மனதில் இருப்பதை வெளியில் பேசாமல் எப்போதும் அமைதியாக சென்று விடுவான் என்று. அதுபோல வீட்டிற்கு வந்தாலும், பிருந்தாவிற்கு உதவாமல், நேராக அறைக்கு சென்று அதிக நேரத்தை, Computer, internet என்று கழித்து விடுவானாம். அதனாலேயே அவன் மேல் கொஞ்சம் வருத்தம் இருப்பதாக பிருந்தா அகல்யாவிடம் கூறினாள். பாலாவும் அகல்யாவும் அம்மா மகன் போல இல்லாமல் நண்பர்களை போல பழகுவதை பார்க்க ஆச்சரியமாக இருப்பதாக கூறியிருந்தததை அகல்யா நினைவு கூர்ந்தாள். இங்கிருந்து செல்லும்போது சூரஜ்ஜை, தன் மகன் பாலா போல மாற்றி அனுப்பி வைக்க முடிவு செய்தாள். தான் பாலாவுடன் எப்படி பழகுவாளோ, அதே போல சூரஜ்ஜிடம் பழகி அவனை ஒரு வழிக்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தாள் அகல்யா.


No comments:

Post a Comment