Wednesday 22 April 2020

ஸ்வேதா MBBS

நான் ஸ்வேதா. 21 வயது. சென்னை தான் சொந்த ஊர். அப்பா டாக்டர். அம்மா ஹவுஸ் வைப். நானும் MBBS மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பெண் தான். என்னுடன் 40 மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் என்னையும் சேர்த்து 13 பேர் பெண்கள். மீதம்‌ 27 பேர் ஆண்கள். என் அப்பா என்னை எப்படியாவது டாக்டர் ஆக்கி விட வேண்டும் என்று ஆசைபட்டார்.

அதனால் நானும் ரொம்பவும் கஷ்டப்பட்டு படித்து +2 வில் நல்ல மார்க்  எடுத்தேன். அதன் பின் நீட் எழுதி அதிலும் மிக சிரமப்பட்டு நல்ல மார்க் எடுக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீட் கிடைத்தது. முதல் இரண்டு வருடம் எந்த பிரச்சனையும் இல்லாமல் போக மூன்றாம் ஆண்டு ஆரம்பத்தில் அடிக்கடி காய்ச்சல், வாந்தி வந்து விடுமுறை எடுத்துக் கொண்டு இருந்தேன்.

ஒரு முறை காய்ச்சல் அதிகமாக ஒரு பெரிய ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனேன். அங்கு என்னவென்று சொல்லாமல் பல ரத்த பரிசோதனைகளும் எடுத்துக் கொண்டு இருந்தனர். அதன்பின் இரண்டு நாள் கழித்து டெஸ்ட் ரிப்போர்ட் வந்த பின் எனக்கு ரத்த அணுக்களில் கேன்சர் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். 

அடுத்த இரண்டு நாளில் லேசர் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார். நான் அதுவரை என் பெற்றோரிடம் என் உடல்நிலையை பற்றி சொல்லவில்லை. லேசர் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க வேண்டும் என்ற சமயத்தில் தான் என் வீட்டிற்கு போன் செய்து சொன்னேன். என் அப்பாவும், அம்மாவும் அடுத்த பிளைட்டில் கிளம்பி வந்தனர். என் நிலையை அப்பாவும், அம்மாவும் ரொம்பவே வருத்தப்பட்டனர்.

அவர்கள் சென்னையில் இருந்து டெல்லி வரும் வரை என் நண்பர்கள் தான் என்னை பார்த்துக் கொண்டனர். ஒவ்வொருவரும் வேறு வேறு மாநிலத்தை  சேர்ந்தவர்கள். ஆனால் எல்லோரும் மிக ஒற்றுமையாக இருப்போம். அதனால் என்னுடன் படிக்கும் நண்பர்களே என்னை பார்த்துக் கொண்டனர்.

அன்று மாலை 4 மணிக்கு டாக்டர் வந்தார். நாளை மறுதினம் 10 மணிக்கு முதல் ஷெட்யூல் லேசர் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க வேண்டும் என்றும், அதற்க்கு சில வழிமுறைகளையும் சொன்னார். எல்லாம் சொல்லி விட்டு கடைசியாக லேசர் ட்ரீட்மெண்ட் என்பது ரொம்ப கடுமையான சிகிச்சை என்றும், அதை தாங்கி கொள்ள உன்னுடைய மனதை தயார் ஆக்கிக் கொள்‌ என்றும்‌ சொல்லி விட்டு சென்றார். 

அதே போல லேசர் ட்ரீட்மெண்ட் முதல் ஷெட்யூல் முடிந்து நான் ரெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நர்ஸ் வந்து அடுத்த லேசர் ட்ரீட்மெண்ட் எடுக்கும் முன் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்று சொல்ல, நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். என் அம்மா தான் எனக்கு ஆறுதல் சொன்னாள். அன்று மாலை என் தோழி நிவேதா வர, அவளிடம் என் அம்மா, எனக்கு மொட்டை அடிக்க வேண்டிய விஷயத்தை சொல்ல, அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்  சரி என்று கேட்டுக் கொண்டாள். நிவேதா என்னுடைய ரூம் மேட். நானும் அவளும் காலேஜ் சேர்ந்த முதலே ஒரே ரூமில் இருந்து வருகிறோம்

அடுத்த நாள் காலை நேரத்திலேயே நிவேதா என் அறைக்கு வர, ஹாஸ்பிடலில் இருந்து பாஸ் வாங்கிக் கொண்டு என்னை ஒரு பார்லருக்கு கூட்டி சென்றாள்.

நிவேதாவே ரிஷப்ஷனிஸ்ட்டிடம்‌ பேசி எனக்கு மொட்டை அடிக்க ஒரு பியூட்டிஷனை பிக்ஸ் பண்ணி விட்டு என்னிடம் வந்தாள். 

ஸ்வேதா, கொஞ்ச நேரம்‌ வெயிட் பண்ணனும்டி... பியூட்டிஷியன் அவைலைபிள் இல்ல...

இட்ஸ் ஒகேடி நிவேதா... என்று சொல்லி  நாங்கள் இருவரும் வேறு விஷயங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். என் உடல்நிலையை பற்றி எதுவும் கேட்காமல், ஜாலியாக என்னிடம் கதை பேசிக் கொண்டு இருந்தாள். சிறிது நேரம் கழித்து பியூட்டிஷியன் வந்து ஸ்வேதா என்று என் பெயர் சொல்லி கூப்பிட நான் எழுந்து உள்ளே சென்று சேரில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். 

அவளுக்கு ஹெட் ஷேவிங் பண்ணனும் என்று நிவேதா சொல்ல அதற்க்கு தயார் ஆனாள் பியூட்டிஷியன்.

நான் கூச்சத்தில் என் தலையை குனிந்து உட்கார்ந்து கொள்ள, பியூட்டிசியன் என்னிடம் பேசினாள்.

ஹாய், ஸ்வேதா.. என் பேரு அனிதா,  நான் இங்க ரொம்ப வருஷமா ஒர்க் பண்றேன், நீ எதுக்காக மொட்டை அடிக்கிறேன்னு உன் ப்ரெண்ட் சொன்னா, கவலைப்படாதே, பெண்களுக்கு முடி மட்டும் அழகு இல்லை... எந்த பொண்ணுக்கும் கள்ளம், கபடமில்லாத மனசு இருக்கோ அவள் தான் ரொம்ப அழகானவள் என்று சொல்ல நான் அவளை புன்னகையுடன் பார்த்தேன்.

இப்போ உனக்கு நான் மொட்டை அடிக்க போறேன்... நீ சீக்கிரமே குணமாகி எங்கிட்டயே மறுபடியும் ஹேர் கட் பண்ண வரணும்னு நான் வேண்டிக்கிறேன்‌ என்று சொல்லி விட்டு எனக்கு மொட்டை அடிக்க ஆரம்பித்தாள். நிவேதா என் பின்னால் நின்று கொண்டு எனக்கு மொட்டை அடிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

என் தலை முடி கொஞ்சம் கொஞ்சமாக என் மேலே  விழ என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஏய், ஸ்வேதா அழாதடி.. நாங்க எல்லோரும் உனக்கு துணையா இருப்போம்டி என்றாள் நிவேதா.

ம்ம்ம்ம் என்று சொல்லி விட்டு தலை குனிந்து உட்கார்ந்து கொண்டேன்.

அனிதா கூட எனக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் பேசினாள். ஆனால் இந்த நிவேதா என்னுடன் மூன்று வருடமாக இருக்கிறாள்... ஆனால் என் மேல் கொஞ்சம் கூட  பாசம் இல்லாமல் இருக்கிறாளே என்று வேதனையுடன் இருக்க,  அனிதா என் தலை முழுவதும் மொட்டை அடித்து முடித்து விட்டாள்.

நான் சேரை விட்டு எழ, அனிதா என் மேல் இருந்த முடியை க்ளீன் செய்து உதறிவிட்டாள். 

ஸ்வேதா, கொஞ்ச நேரம்  வெயிட் நானும் ஹேர் கட் பண்ணிட்டு வர்றேன்‌ என்று சொல்ல நான் உள்ளே நிற்க பிடிக்காமல் ரிஷப்ஷனில் வந்து உட்கார்ந்து கொண்டேன்.

மூன்று வருடம் கூடவே இருந்தவள் மொட்டை அடித்துக் கொண்டு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் தன்னை அழகு படுத்திக் கொள்கிறாளே என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன்.

இனி எப்படி இந்த மொட்டை தலையுடன் கிளாஸீக்கு போவது, மற்றவர்களின்‌ கேள்விக்கு எப்படி பதில்‌ சொல்வது என பல யோசனை வந்தது. நேரம் போவதே தெரியாமல்  நான் ஒரு யோசனையில் இருக்க
நிவேதாவின் குரல் கேட்டு தான் சுய  நினைவுக்கு வந்தேன்.

ஏய் ஸ்வேதா போலாமாடி என்று கேட்டுக் கொண்டே பார்லரை விட்டு வெளிவந்த நிவேதாவை பார்த்ததும் ஓடிச்சென்று அவளை கட்டி பிடித்து கொண்டு அழுதேன்.

ஹேய் என்ன நிவேதா நீயும் மொட்டை அடிச்சு இருக்க...

உனக்காக தான்டி, நம்ம ரூம்ல நாம ரெண்டு பேரும்‌ தான் இருக்கோம், அப்போ நீ மட்டும் மொட்டை தலையோட இருந்தா உனக்கு கஷ்டமா இருக்கும்... அதான்டி நானும் மொட்டை அடிச்சேன், 

நான் நிவேதாவை விடாமல் அழுது கொண்டு இருக்க, அவளும் தாங்க முடியாமல் என்னை கட்டிக் கொண்டு அழுதாள். நாங்கள் அழுத சத்தம் கேட்டு பார்லரில் இருந்து அனைவரும் வெளியே வந்து எங்களுக்கு ஆறுதல் சொல்ல, நாங்கள் அங்கு இருந்து கிளம்பினோம்.

நாங்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்ததும், நிவேதாவை பார்த்த என் பெற்றோர் அவள்‌ தன் தோழிக்காக செய்த தியாகத்தை பாராட்டினர். அடுத்த நாள் ஹாஸ்பிடல் சென்று ட்ரீட்மெண்ட் எடுத்து விட்டு வீடு வந்து ரெஸ்ட் எடுக்க, மாலை என் கூட படிக்கும் நண்பன் ஒருவன் வந்தான். அவன் ஆந்திராவை சேர்ந்தவன். பெயர் சுரேஷ் ரெட்டி.

வாடா சுரேஷ், எப்படி இருக்க... 

நல்லா இருக்கேன் ஸ்வேதா... ஹாஸ்பிடல் போனியா... என்ன சொன்னாங்கடி...

சில தடவை லேசர் ட்ரீட்மெண்ட் எடுக்க சொல்லி இருக்காங்க சுரேஷ்...

ம்ம்ம், சரிடி... ஒண்ணும் பயப்படாதே...
சீக்கிரம் சரியாய்டும்... இந்தா திருப்பதி பிரசாதம்... உனக்காக தாண்டி வேண்டிக்கிட்டேன்...

தேங்க்ஸ்டா சுரேஷ்... திருப்பதில எனக்காக மொட்டை போட்டியா...

அப்படி இல்ல, ஒரு வேண்டுதல் இருந்துச்சு... அப்படியே உனக்கும் வேண்டிக்கிட்டேன்...

ஆமா, நிவேதா நீ ஏண்டி மொட்டை போட்ட...

நல்லவேளை..‌இப்பவாது என்னை கேட்டியே.... அது நம்ம ஸ்வேதா பார்லர்ல லேசர் ட்ரீட்மெண்ட்க்காக மொட்டை அடிச்சா.. அப்புறம் பார்த்தா ரொம்ப அழகா இருந்தா... சோ நானும் மொட்டை அடிச்சிட்டேன்.... எப்படிடா இருக்கேன்...

வ்வ்வ்வே... நல்லாவே இல்ல... இதுக்கு நீ முன்னாடி இருந்ததே பெட்டர் என்று சுரேஷ் ரெட்டி கலாய்க்க, சிறிது நேரம் ஜாலியாக பேசி விட்டு  இருந்தோம்..

அப்புறம் நாளைக்கு முக்கியமான பிராக்டிக்கல் கிளாஸ் இருக்குடி.. மறக்காம ரெண்டு பேரும்‌ வந்துடுங்க... என்று சொல்லி விட்டு கிளம்பினான்..

அடுத்த நாள் காலை இருவரும் கிளாஸ்க்கு செல்ல அங்கு என் வகுப்பில் அனைவரும் மொட்டை தலையுடன் எழுந்து வரவேற்றனர். அதை பார்த்ததும் நான் உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டேன். 

ஏய், ஸ்வேதா ஏண்டி அழறே... என்னாச்சிடி.. 

இல்லடி... என் ஒருத்திக்காக நீங்க எல்லோரும் மொட்டை அடிச்சதை பார்க்கிற போது எனக்கு என்ன செய்வதுன்னு தெரியலடி... 

ஒண்ணும் செய்ய வேண்டாம்டி... நீ குணமாகி வந்தா போதும்டி.... நாங்க எல்லோரும் உன் மேல வச்சிருக்கிற அன்பு நிச்சயமா உன்னை காப்பாத்தும்... என்று ஸ்வேதா சொல்ல என் நண்பர்கள் எல்லோரும் என்னை கட்டி பிடித்து ஆ றுதல் சொன்னார்கள். அதன் பின் என் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்து கொண்டோம் 

அவர்கள் அனைவரின் அன்பால் நான் விரைவில் கேன்சர் நோயிலிருந்து முற்றிலும் குணமாகினேன்..

நன்றி..

இந்த கதை கடைசியாக உள்ள போட்டோவை பார்த்ததும் என் மனதில் தோன்றியது. மாலை கதை தொடங்கி இரவு முடித்து விட்டேன். 
கதையில் மொட்டை அடிப்பதை விரிவாக்கம் செய்யவில்லை என்று எனக்கு வருத்தம் தான்.. ஆனால் இந்த கதைக்கு நண்பர்களின் நட்பு தான் முக்கியம் என்பதால் அதை மட்டும் குறைந்தபட்ச நேரத்தில் உணர வைத்து இருக்கிறேன் என்று நம்புகிறேன்...

 உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்... நன்றி..

2 comments:

  1. Super story எனக்கு நட்பின் வலிமையை இந்தக்கதை உணத்தியது

    ReplyDelete