Tuesday 11 August 2020

ஷீலாவின் அழகிய கூந்தல்

Sheela hair cut

ஷீலா 24 வயது அழகி. சில மாதங்கள் முன்பு தான் திருமணமானவள். காலேஜ் முடித்து விட்டு நல்ல வேலையில் இருந்தவளை அவளின் பெற்றோர் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் தன் கணவன் ரிச்சர்ட் மேல் மிகுந்த காதல் கொண்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருந்தனர். 

ஷீலா அவள் அழகை பார்த்து பார்த்து பராமரித்தாள். அவளுடைய அழகான கூந்தலை நடுமுதுகுக்கு கீழ் வரை வளர்த்து அழகாக கட் பண்ணி இருந்தாள். ஷீலாவின் குடும்பம் ரொம்பவும் பழைய நம்பிக்கைகளை பின்பற்ற கூடியவர்கள். ஆனால் ஷீலா ரொம்பவே மாடர்னான பெண். அது மட்டுமில்லாமல் ரொம்பவே தைரியமும், துணிச்சலும் கொண்டவள். கல்யாணத்திற்க்கு முன்பு அவள் வீட்டில் இருக்கும் போது மாடர்ன் உடைகளை தான் அணிவாள்.

ஆனால் ரிச்சர்ட் வீட்டில் பெண்கள் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக தான் உடை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அதனால் வீட்டில் இருக்கும் போது எப்போதும் சேலையை மட்டும் உடுத்துவாள். ஆனால் வேலைக்கு சென்றதும் அவள் விருப்பம் போல மாடர்ன் உடைகளை தான் அணிவாள். அவளுடைய ஆபிஸில் ட்ரெஸ்ஸிங், அண்ட் ஸ்டைலில் ஷீலா தான் நம்பர் ஒன். அவளை மிஞ்ச ஆள் இல்லை.


ஷீலா ஒர்க் பண்ணுவது சென்னையில் பெரிய ஐடி கம்பெனியில். திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து தான் புதிதாக ஜாய்ன் பண்ணி இருந்தாள் ஷீலா. சென்னையில் எப்போதுமே நல்ல வெயில் இருக்கும். அதுவும் மே மாதத்தில் வெயில் இன்னும் வாட்டி எடுத்து கொண்டு இருக்க, ஒரு நாள் மாலை ஆபிஸ் ஒர்க் முடிந்து ஆபிஸ் கேப்பில் வீடு வந்து சேர்ந்தாள். 

ரிச்சர்ட் அவன் வேலை விஷயமாக ஹைதராபாத் சென்று இருந்தான். வீட்டில் ஷீலா மட்டுமே இருந்தாள். சென்னையில் வெயிலில் வியர்த்து ஒழுக, வீடு வந்து சேர்ந்தாள் ஷீலா. களைப்பாக இருந்ததால் தன் ரூமிற்க்கு சென்று ப்ரெஷ் அப் ஆகி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க, ஷீலாவின் மாமியார் அவளை கூப்பிட அலுத்துக் கொண்டே எழுந்து கிச்சனுக்கு போனாள்.


என்ன, ஷீலா நினைச்சுட்டு இருக்க, ஆபிஸ் முடிஞ்சு வந்தா போய் படுத்துக்குற, ஏன் வீட்டு வேலை பார்த்தா குறைஞ்சு போய்டுவியா?. நானும் உன் வயசுல வேலைக்கு போய்ட்டு வந்து வீட்டுலயும் வேலை செஞ்சு தான் உன் புருஷனை காப்பாத்தி இருக்கேன்...

இல்ல அத்தை... ஆபிஸ்ல கொஞ்சம் அதிகமாக வேலை இருக்கு.. அதும் இந்த ட்ராபிக்ல வெயில்ல வந்ததும் ரொம்ப டயர்டா இருக்கு..!

அதுக்கு, நான் ஒருத்தி மட்டும் உங்க எல்லாருக்கும் சமையக்கட்டுல ஆக்கி போட்டு வேகணுமா? எல்லா வேலையும் என்னால மட்டும் செய்ய முடியாது.. எனக்கும் வயசு ஆகுது.. கூடமாட ஏதாவது வேலை செஞ்சா தானே ஆகும்..?

நான் என்ன அத்தை பண்ண... நான் வேலை முடிஞ்சு வரும் போதே நொந்து போய் வர்றேன்... உங்க கஷ்டம் எனக்கு புரியுது...ஆனால் எனக்கும் டயர்டா இருக்கு, அது என் தப்பு இல்லை..?


உன்ன தப்புன்னு சொல்லலடி... பணம் சம்பாதிக்கிறதல மட்டும் குறியா இல்லாம கொஞ்சம் குடும்பத்து மேலயும் அக்கறை வைக்கணும்..?

இப்படியே இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டு இருக்க, வாக்குவாதத்தை தவிர்க்க கொஞ்ச நேரம் சின்ன சின்ன வேலைகள் செய்து விட்டு போய் படுத்துக் கொண்டாள். அடுத்த சில நாட்களில் ரிச்சர்ட் ஹைதராபாத்தில் இருந்து வந்துவிட, அன்று இருவரும் வெளியே ஷாப்பிங் சென்றனர்.

என்னங்க இவ்ளோ ஹாட்டா இருக்கு கிளைமேட்? என்னால கொஞ்சம் கூட சமாளிக்க முடியல, ஸோ டயர்ட்..!

ஆமா ஷீலா, கிளைமேட் ரொம்ப ஹாட்டா தான் இருக்கு, ஆனா நம்மால ஒண்ணும் பண்ண முடியாது.. நாம தான் கிளைமேட்டுக்கு தகுந்த மாதிரி நம்மளை மாத்திக்கணும்..

அதெப்படி நம்மளை மாத்திக்க முடியும்... நான் என்ன செஞ்சும் இந்த ஹாட் வெதரை என்னால சமாளிக்க முடியல, உனக்கு தெரிஞ்ச ஐடியா ஏதாவது சொல்லு ரிச்சர்ட்..?

ஈஸியா உன்னால சமாளிக்க முடியும் ஷீலா... நான் எப்படி இந்த கிளைமேட்டை சமாளிக்கிறேன்.. நாம வீட்டுக்கு போனதும் பொறுமையா யோசி... உன்னால கண்டிப்பா முடியும் ஷீலா..!

நீ சொல்றதை என்னால புரிஞ்சுக்க முடியல ரிச்சர்ட்... இப்போதைக்கு நீ சீக்கிரமா என்னை வீட்ல கொண்டு விட்டா போதும்..!

ரெண்டு பேரும் சில நிமிடங்கள் கழித்து வீட்டுக்கு போய் சேர, தன் அத்தையுடன் சேர்ந்து சமைத்து எல்லோரும் சாப்பிட்டு விட்டு தூங்க போக, ரிச்சர்டுக்கு ஒரு போன் வர, அவன் போனில் பேசிக் கொண்டு இருக்கும் போது தான் ஷீலா யோசிக்க ஆரம்பித்தாள். தான் மட்டும் சென்னை வெயிலுக்கு ரொம்பவும் கஷ்டபடும் போது, ரிச்சர்ட் கேசுவலாகவும், ரிலாக்ஸாகவும் இருப்பது எப்படி என்று யோசித்தாள். ஆனால் அவளுக்கு சரியான காரணம் எதுவும் தோன்றவில்லை.

ரிச்சர்ட் ரொம்ப ப்ரெண்ட்லியான ஆள். எல்லோரிடமும் ஈஸியாக ஒட்டிக் கொள்வான். அது போலவே சுலபமாக ஷீலாவின் மனதை கவர்ந்து விட்டான். இருவரும் ஒரு பார்க்கில் தனியாக உட்கார்ந்து ஜாலியாக பேசிக் கொண்டு இருந்தனர். பின் மெரினாவிற்க்கு ஷீலாவை அழைத்து சென்றான். அங்கு இருவரும் ஜாலியாக ஓடி பிடித்து விளையாடினர். சில நிமிடங்களில் ஷீலாவுக்கு ஓடி விளையாடியதால் வியர்த்துக் கொட்ட, அவள் போய் ஒரு இடத்தில் உட்கார, அவள் அருகில் சென்று ரிச்சர்டும் உட்கார்ந்து கொண்டான். அப்படியே கடலின் அழகை பார்த்துக் கொண்டு இருந்தனர் இருவரும்.

கொஞ்சம் தள்ளி காலேஜ் பெண்கள் சில பேர் வாலிபால் விளையாடிக் கொண்டு இருக்க, அவர்கள் ரொம்ப நேரமாக விளையாடியும், டயர்ட் ஆகாமல் இருந்தனர். அது எப்படி சாத்தியம் என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் ஷீலா. அதற்க்குள் ரிச்சர்ட் இருவருக்கும் ஸ்னாக்ஸ் வாங்கி வந்தான். அவர்கள் விளையாடுவதையே பார்த்துக் கொண்டு இருந்த ஷீலா அப்போது தான் அந்த ஒரு விஷயத்தை கண்டுபிடித்தாள்.


வாலிபால் விளையாடிக் கொண்டு இருந்த பெண்கள் அனைவரும் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தனர். ஆனால் சில பெண்கள் தங்கள் தலை முடியை பாய்கட் அல்லது பிக்ஸி ஹேர்கட் போல வெட்டி இருந்தனர். அப்போது தான் ரிச்சர்ட் சொன்ன வார்த்தை அவளுக்கு நினைவு வந்தது. தன்னுடைய நீளமான முடியை கட் பண்ணுவதால் இந்த ஹாட்டான கிளைமேட்டை சமாளிக்க முடியும் என்றும், அதனால் தன்னுடைய எல்லா பிராப்ளமும் குறையும் என்றும், வீட்டில் தன் மாமியாருக்கு சில உதவிகளையும் செய்ய முடியும் என்று யோசித்தாள் ஷீலா.

இதனால் வீட்டுக்கு போனதும் நாளையே தான் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றுவது என்று முடிவு செய்தாள். அடுத்த நாள் ஆபிஸில் கூகுளில் சர்ச் செய்து சென்னையில் எது பெஸ்ட் லேடீஸ் பியூட்டி பார்லர் என்று பார்த்தாள். அப்படியே தனக்கு எந்த மாதிரியான ஹேர் கட் பண்ணலாம் என்றும் கூகுளில் சர்ச் செய்து பார்த்து ஒரு அழகான ஹேர் ஸ்டைலை தேர்வு செய்தாள் ஷீலா. அதை தன் கணவன் ரிச்சர்ட்க்கு வாட்ஸ் அப் செய்ய, அவன் ஒரு ஸ்மைலி ஒன்றை அனுப்பி ஹேர் கட் பண்ண சம்மதம் சொல்ல அன்று மாலையே தான் தேர்வு செய்த பார்லருக்கு போவது என்று முடிவு செய்தாள் ஷீலா. மாலை ஆபிஸ் கேப்பை தவிர்த்து விட்டு ஒரு ஆட்டோவை பிடித்தாள். ஆட்டோவில் ஏறி விட்டு அந்த பேமஸான பார்லருக்கு போக சொல்ல ஆட்டோ டிரைவர் ஷீலாவை ஆச்சர்யமாக திரும்பி பார்த்தான்.

மேடம், நீங்க அந்த பார்லருக்கு தான் போறீங்களா?

ஆமா, ஏன் இப்படி கேக்குறீங்க?

இல்ல மேடம், எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஒண்ணு போன வாரம் அந்த பார்லருக்கு போச்சு... அந்த பொண்ணுக்கு உங்க முடியை விட நல்ல நீளமான முடி..கொஞ்சம் ட்ரிம் பண்ண சொன்னா, ஏதோ மிஸ் கம்யூனிகேஷன்ல அந்த பொண்ணு முடியை மொத்தமும் கட் பண்ணி பாப் கட் மாதிரி பண்ணிட்டாங்க... இதில என்ன மேட்டர்னா அவளுக்கு அடுத்த நாள் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுகாரங்க வர்ற நிலைமை... அந்த பாப் கட் பார்த்து மாப்பிள்ளை  பொண்ணை ஓகே பண்ணிட்டான்.. இன்னும் ரெண்டு மாசத்துல மேரேஜ்னு பிக்ஸ் பண்ணி இருகாங்க...

ஓ.. வாட் அ சர்ப்ரைஸ்... ரொம்ப நல்ல விஷயம்...!

ஆனா ஒண்ணு மேடம்.. நீங்க சேர்ல உட்காரும் போது உங்களுக்கு என்ன ஹேர் கட் பண்ணனும்னு புரியுற மாதிரி சொல்லிடுங்க... இல்லன்னா உங்களுக்கு  மொட்டை அடிச்சு விட்டுற போறாங்க...!

அய்யோ அண்ணா.. உங்க அட்வைஸூக்கு ரொம்ப தேங்க்ஸ்..!

மேடம், என் வீடு பக்கத்துல தான்... நீங்க பார்லர்ல வேலையை முடிச்சுட்டு கூப்பிட்டா நானே உங்களை ட்ராப் பண்ணிடுவேன்.. இந்தாங்க என் கார்டு என்று ஆட்டோ டிரைவர் கார்டை கொடுக்க ஷீலா வாங்கிக் கொண்டு பார்லருக்குள் போனாள். கொஞ்சம் பதட்டத்துடன், வழக்கம் போல வியர்த்துக் கொட்ட பார்லருக்குள் போனாள் ஷீலா. இரண்டு பெண்கள் சலூன் யூன்பார்முடன் ரிஷப்ஷனில் நிற்க, சிரித்துக் கொண்டே ஷீலாவை வரவேற்றனர்.

தான் ஹேர் கட் பண்ண வந்து இருப்பதாக ஷீலா சொல்ல, ஒரு பெண் ஆல்பம் ஒன்றை எடுத்து ஷீலாவிடம் கொடுத்து அவளுக்கு பிடித்த ஹேர் ஸ்டைல் செலக்ட் செய்ய சொன்னாள். ஷீலாவும் அந்த ஆல்பத்தை புரட்டி தான் பீச்சில் பார்த்த சில பெண்களின் ஹேர் கட் போல போட்டோ இருக்கிறதா என்று பார்த்தாள். ஆனால் எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை. அப்படியே  பக்கங்களை புரட்டிக் கொண்டு இருக்க, அப்போது ரிஷப்சனிஸ்ட் வந்து ஷீலாவின் அருகில் நின்றாள்.

மேடம், நீங்க பார்த்துட்டு இருக்கிறது மென்ஸ் ஹேர் ஸ்டைல் பேஜ்... இதுல உங்களுக்கு ஷூட் ஆகுற மாதிரி எந்த ஹேர் ஸ்டைலும் இருக்காது..

இல்ல... நான் இதுல இருக்க மாதிரி தான் ஒரு ஹேர் ஸ்டைல் சூஸ் பண்ணலாம்னு இருக்கேன்... கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்று சொல்லி விட்டு, இன்னும் சில பக்கங்களை தேடி விட்டு ஒரு நல்ல ஹேர் ஸ்டைலை தேர்வு செய்தாள் ஷீலா.

ம்ம்ம்ம்.. எனக்கு இந்த ஷார்ட் ஹேர் கட் ஓகே...

மேடம், பாய்கட் பிக்ஸி ஹேர் கட்... இது மாதிரி ஹேர் கட் பண்ண உங்களுக்கு ஒரு நல்ல மென்ஸ் ஹேர் ஸ்டைலிஸ்ட்டை செலக்ட் பண்ணி தர்றேன்.. அவர் தான் எங்க சலூன்ல பெஸ்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட்...

நோ வே... நான் எப்படி மென்ஸ்கிட்ட ஹேர் கட் பண்ணிக்க முடியும்.. நோ லேடி ஹேர் ஸ்டைல் இருந்தா பாருங்க...

இல்ல மேடம், நீங்க சூஸ் பண்ண ஹேர் கட் எங்க லேடி பியூட்டிஷியனுக்கு இன்னும் ட்ரைனிங் கொடுக்கல... பட் மென்ஸ் ஹேர் ஸ்டைலிஸ்ட் சூப்பரா பண்ணுவாங்க... நீங்க ஓகே சொன்னா உங்களுக்காக அவரை வர சொல்றேன்...

ஷீலாவுக்கு ஒரு ஆணிடம் தன் அழகான முடியை வெட்டிக் கொள்வதில் விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் சரி என்று சொல்ல, ரிஷப்சனிஸ்ட்டும் ஒரு மென்ஸ் ஹேர் ஸ்டைலிஸ்ட்டை வர சொல்லி விட்டு, ஷீலாவை கூட்டி சென்று ஒரு குஷன் சோபாவில் உட்கார சொன்னாள்.

ஹாய், நான் தான் உங்க ஹேர் ஸ்டைலிஸ்ட்... என்னோட பேரு தினேஷ்.. இந்த ஹேர் ஸ்டைல் தான் நீங்க சூஸ் பண்ணி இருக்கீங்களா?

யெஸ்... 

சூப்பர் செலக்ஷன் மேடம்... பொதுவா கேர்ள்ஸ் இந்த மாதிரி ஷார்ட் ஹேர் கட் சூஸ் பண்ண மாட்டாங்க.. அதுக்கு ரொம்பவே தைரியம் வேணும்.. அந்த கெத்து உங்ககிட்ட இருக்கு... 

தேங்க்ஸ் தினேஷ்.. என்னோட நேம் ஷீலா... எனக்கு இந்த நீளமான முடியை மெயின்டெய்ன் பண்ண முடியல... ஆபீஸ்ல ஹெவி ஒர்க், தென் வீட்டுக்கு போய் எந்த வேலையும் பார்க்க முடியல, ரொம்ப டயர்டா இருக்கு.. அதுக்கு இந்த நீளமான முடியும் ஒரு ரீசன்... அதான் ஹேர் ஸ்டைல் சூஸ் பண்ணேன்..


ஒகே ஷீலா.. இப்போ உங்க ஹேரை கொஞ்சம் வாஷ் பண்ணனும், அந்த ஏரியாக்கு போய்டலாமா.. என்று சொல்லி கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு வாஷ் பேஷினில் ஷீலாவின் அழகிய முடியை தினேஷ் வாஷ்   செய்தான். அதன் பின் ஈரமான முடியை ஒரு டவலால் துடைத்து விட்டு, கொஞ்சம் ட்ரை செய்தான். பின் ஷீலாவின் கழுத்தை சுற்றி ஒரு துணியை எடுத்து போர்த்தி விட்டான். ஒரு சீப்பை எடுத்து ஷீலாவின் நீளமான முடியை சீவி ஒரு ரப்பர் பேண்ட் போட்டு விட்டு, சீசர் வைத்து காதுக்கு கொஞ்சம் கீழ் வரை அளவு எடுத்து வெட்டினான். ஷீலா தான் ஆசையாக வளர்த்த முடியை வெட்டுவதை பார்க்காமல் தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

ஷீலா கண்ண மூடாம தைரியமா உங்க ஹேர் ஸ்டைலை எப்படி மாத்துறேன்னு பாருங்க... பார்த்து உங்க நியூ ஹேர் ஸ்டைல் எப்படி வருதுன்னு பாருங்க ஷீலா..!

ஷீலா ஒரு வித கூச்சத்துடன் தன் கண்களை திறந்து பார்க்கவும், ஷீலாவின் நீளமான முடி வெட்டப்பட்டு, காது வரை மட்டுமே ஒரு பவுல் கட் போல ஷீலாவின் முடி இருந்தது. 

இல்ல தினேஷ், இத்தனை வருஷத்துல ஒரு ஜென்ஸ் பார்பர்கிட்ட நான் ஹேர் கட் பண்ணியதே இல்லை.. அதான் கொஞ்சம் ஷையா இருக்கு...

பார்பர் எல்லாம் இப்போ இல்லை ஷீலா.. நாங்க ஹேர் ஸ்டைலிஸ்ட், இதுல ஆண், பெண் எல்லாரும் ஒரே மாதிரி தான்... ஹேர் ஸ்டைலிஸ்ட் மட்டும் தான்.. ஷோ டோண்ட் பீ ஷை... ஒகே ஷீலா...

யெஸ் தினேஷ்...

இப்போது ஷீலா தான் வைத்து இருந்த பேக்கில் இருந்து தன் செல்போனை எடுத்து தன்னை இந்த புதிய தோற்றத்தில் சில போட்டோக்கள் எடுக்க சொல்ல, தினேஷும் ஷீலாவை அழகாக சில போட்டோக்கள் எடுத்தான். பின் ஷீலாவிடம் அதை காண்பிக்க அவள் தலை ஒரு சிறு பெண்ணின் தலை முடியை போல இருப்பதை பார்த்து வியந்தாள்.



அதன் பின் தினேஷ் ஷீலாவின் தலையை குனிய வைத்து, ஒரு க்ளிப்பர் கொண்டு அவள் பின் தலையில் இருந்த முடியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வெட்டினான். அதே போல இரு காது பக்கமும் முடி சிறிய அளவில் இருக்குமாறு வெட்டினான். அதற்க்கு பிறகு உச்சி மண்டையில் இருந்த முடியை சீவி ஒழுங்குபடுத்தினான். பின் ஒரு ரேசரை வைத்து பிசிறாக இருந்த முடியை பின் கழுத்தில் ஷேவ் செய்து விட்டான் தினேஷ். அதே போல இரு காது பக்கமும், கிருதா பக்கமும் இருந்த முடியை ஷேவ் செய்து விட, கூச்சத்துடன் உட்கார்ந்து கொண்டு இருந்தாள் ஷீலா. பின்  கண்ணாடியில்  ஷீலாவின் தலையை பார்க்க சொல்ல, அவள் தன் புதிய பாய்கட் ஹேர் ஸ்டைலை கண்டு வியந்தாள். 

வாவ்...! சூப்பர்ப் தினேஷ்.. நான் அந்த போட்டோல பார்த்த மாதிரியே இருக்கு.... சூப்பர்ப் ஒர்க் தினேஷ்... தேங்க் யூ வெரி மச்... அன்ட் ஒன்ஸ் அகெய்ன் நான் இன்னொரு முறை அந்த ஆல்பம்ல இருக்க போட்டோவை பார்க்கலாமா என்று ஷீலா கேட்க, ரிஷப்சனிஸ்ட் வந்து அந்த ஆல்பத்தை காட்டினாள். அந்த போட்டோவை ஆல்பத்தில் இருந்து வெளியே எடுத்து தன் முகத்தின் முன் வைத்து கொண்டு, போட்டோவையும் தன் முகத்தை கண்ணாடியிலும் மாறி மாறி பார்த்தாள் ஷீலா. அந்த போட்டோவில் இருந்த மாடலை போலவே அவள் ஹேர் ஸ்டைல் இருக்க திருப்தியாக ஆனாள் ஷீலா.


பின் மீண்டும் ஒரு முறை வாஷ் பேஷினில் ஷீலாவின் தலையை வெட்டிய முடிகளை அலசி விட்டு, டவலால் துடைத்து விட்டான் தினேஷ். பின் ஒரு சீப்பை எடுத்து பாய்கட் ஹேர் ஸ்டைல் போல சீவியும் விட்டான். மீண்டும் தன் அழகை பார்த்து வியந்து சிரித்து விட்டாள். ஆனால் ஒரு பக்கமும் கொஞ்சம் கூச்சமும் இருந்தது. சலூனில் இருந்த ஏசி குளிரில் சில்லென்ற காத்து ஷீலாவின் தலையில் பட அவள் தலையில் புது வித உணர்வை உணர்ந்தாள் ஷீலா. 

பின் ஹேர் கட் பண்ணியதற்க்கு பே பண்ணி விட்டு, ரொம்ப அழகாக கட் பண்ணி விட்ட தினேஷ்க்கு தேங்க்ஸ் சொல்லி விட்டு சலூன் விட்டு வெளியே வர, அவள் வந்த ஆட்டோ தயாராக நின்று கொண்டு இருக்க, ஷீலா ஆட்டோவில் ஏறினாள்.

ஹலோ, ஆட்டோ வெயிட்டிங்ல இருக்கு, மேடம் உள்ள போய் இருக்காங்க.. அவங்க வர்றதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
நீங்க வேற ஆட்டோ பாருங்க... என்றான் டிரைவர்.

எந்த பொண்ணுக்கு வெயிட் பண்றீங்க அண்ணா?

நான் தாங்க அவங்களை இந்த 
சலூன்ல ட்ராப் பண்ணேன்.. அந்த மேடம் வருவாங்க...

அய்யோ, அண்ணா நீங்க ட்ராப் பண்ணது என்னை தான்..

என்னங்க சொல்றீங்க.. ? உங்களையா நான் ட்ராப் பண்ணேன்.. நிஜமாவா சொல்றீங்க..?

ஆமா அண்ணா... என் ஆபிஸ்ல தானே நான் ஆட்டோல ஏறினேன்.. இப்போ ஹேர் கட் பண்ணி இருக்க உங்களுக்கு அடையாளம் தெரியலை..

ஆமா மேடம்.. முன்ன நல்ல நீளமான முடி இருந்துச்சு.. இப்போ சுத்தமா இல்லை...

ஆமா, ஆனா இது நல்லா இருக்கா, இல்லையா?

மேடம் நீங்க உள்ள போகும் போது கல்யாணம் ஆன ஆண்டி மாதிரி இருந்தீங்க.. ஆனா இப்போ காலேஜ் பொண்ணு மாதிரி இருக்கீங்க...!

தேங்க்ஸ் அண்ணா.. இப்போ என்னை என் வீட்ல ட்ராப் பண்ணுங்க..

ஒகே மேடம்... என்று சொல்லி விட்டு ஆட்டோவை எடுத்து  சென்னை ட்ராபிக்கில் ஓட்டினான்.

மேடம் உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்...

கேளுங்க அண்ணா...

எதுக்கு மேடம் உங்க முடியை இப்படி பசங்க கட் பண்ற மாதிரி கட் பண்ணி இருக்கீங்க..

மெயின் ரீசன், நான் ஆபிஸ் ஒர்க் முடிஞ்சு டயர்ட்ல வீட்டுக்கு வந்து என் வயசான மாமியாருக்கு ஹெல்ப் பண்ண முடியல... அதான் நானும் டயர்ட் ஆகாமல் இருக்க இந்த ஹேர் கட் பண்ணி இருக்கேன்..

ரொம்ப நல்ல மனசு மேடம் உங்களுக்கு... எல்லா மருமகளும் உங்களை மாதிரி இருந்தா ஆம்பளைக நிம்மதியா இருப்போம்.. மாமியாருக்கு ஹெல்ப் பண்ண நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும் மேடம்...

ரொம்ப தேங்க்ஸ் அண்ணா...

சில நிமிடங்கள் கழித்து ஷீலா தன் வீட்டுக்கு போய் சேர்ந்தாள். ஷீலா காலிங் பெல் அடிக்க, ஷீலாவின் மாமியார் தான் கதவை திறந்தாள். யாரோ ஒரு பெண் என்று நினைக்க, ஷீலா அத்தை ரிச்சர்ட் வந்தாச்சா என்று கேட்டுக் கொண்டு உள்ளே வேகமாக ஷீலா போக, அப்போது தான் வந்து இருப்பது தன் மருமகள் ஷீலா என்று உணர்ந்து கொண்டாள்.


ஷீலா சில நிமிடங்களில் ப்ரெஷ் அப் ஆகி விட்டு வந்து கிச்சனில் இருந்த தன் மாமியாரை போய் டிவி பார்க்க சொல்லி விட்டு வேகமாக வீட்டு வேலைகளை பார்த்தாள். தன் மருமகள் தனக்காக தான் முடியை கட் பண்ணி இருக்கிறாள் என்று புரிந்து கொண்டாள் மாமியார். அரை மணி நேரம் கழித்து எல்லா வேலையும் முடித்து விட்டு இருவருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்து தன் மாமியாரின் அருகில் உட்கார்ந்து கொண்டாள் ஷீலா. 

இப்ப நீ ரொம்ப அழகா இருக்கட்.. ஷீலா நீ இதை எனக்காக தான் பண்ணி இருக்கனு புரியுதுடி ஷீலா என்று ஷீலாவின் நெற்றியில் முத்தம் கொடுத்தாள் மாமியார்.

சிறிது நேரத்தில் ரிச்சர்ட் ஆபிஸ் விட்டு வர, அவனுக்கு உதவி செய்தாள் ஷீலா. 
இருவரும் அவர்கள் ரூமில் இருந்தார்கள். 

ஷீலா, நா உன்னை ஹேர் கட் பண்ண சொன்னேன்னு எப்படி நான் சொல்லாமல் கண்டுபிடிச்ச...

நான் உன் பொண்டாட்டி டா ரிச்சர்ட்... இது கூட எனக்கு  புரியாதா என்ன... உன்னை பத்தி எல்லாம் எனக்கு தெரியும்..

ம்ம்ம்.. ஆனா இந்த லுக்ல செம ஹாட்டா தான் இருக்கேடி ஷீலா...

தேங்க்ஸ் ரிச்சர்ட்... என்று சொல்லி விட்டு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு முத்தமிட்டனர். இதுக்கு மேல சென்சார் தான்...

அடுத்த நாள் ஷீலா ஆபிஸ் செல்ல மொத்த ஆபிஸ் நண்பர்களும் ஷீலாவின் லுக்கை பார்த்து ரசித்தனர். பிறகு என்ன இந்த வருடமும் ஷீலா தான் பெஸ்ட் லுக் அன்ட் ட்ரெஸ்ஸிங் அவார்ட் வின் பண்ணினாள்.





1 comment: