Friday 7 August 2020

Old Actress Sarika shaved her head for success her Husband's Big Movie

Old Actress Sarika shaved her head for success her Husband's Big Movie.

சரிகா ஹிந்தி திரைப்பட நடிகை. உலக நாயகன் கமல்ஹாசன் ஹிந்தியில் சில படங்கள் நடிக்கும் போது இருவரும் காதலித்தனர். அதன் பின் வெளிநாட்டினரை போல "லிவிங் டூ கெதர் " வாழ்க்கையில் இருவரும் ஒன்றாக சில வருடங்கள் வாழ, இன்றைய தென்னிந்தியாவின் கவர்ச்சி கன்னி ஸ்ருதி கமல்ஹாசன் பிறந்தார். அதனால் இருவரும் கைக் குழந்தையுடன் திருமணம் செய்து கொண்டனர். 




அதன் பின் தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல் " இந்தியன் " படத்தில் நடித்தார். அன்றைய காலகட்டத்தில் இந்தியன் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அந்த படம் வெற்றி பெற சரிகா தன் அழகான தலை முடியை திருப்பதி சென்று  மொட்டை அடித்து தன் இஷ்ட தெய்வத்தை படம் வெற்றி பெற அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டார்.




இந்தியன் திரைப்படம் ஹிந்தியிலும், ஹிந்துஸ்தானி என்ற பெயரில் வெளியாக, அதன் ப்ரிமீயர் ஷோவின் போது கமலுடன் சரிகா கமல்ஹாசன் தன் மொட்டை தலையுடன் மேடையில் தோன்றினார். மொட்டை தலையுடனும் சரிகா கோல்டன் கலர் சேலையில் நெற்றியில் திலகம், காதில் ஜிமிக்கியுடன் அழகாக இருந்தார். 

பிரிமீயர் ஷோவுக்கு வந்த மொத்த ரசிகர்களும் சரிகாவின் மொட்டை தலையை பார்த்து அதிசயித்தனர். சரிகா கமல்ஹாசன் மேல் அவ்வளவு காதலுடன் இருந்தார். அப்படி காதலுடன் இருந்தவரை இன்னொரு மகளான அக்சரா ஹாசன் பிறந்ததும் கருத்து வேறுபாடு என்று டைவோர்ஸ் செய்தார். 

அதன்பின் கௌதமியுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை, இடையில் சில படங்களில் நடித்த நடிகைகள், இப்போது பூஜா குமார் என்று இன்னும் ஜாலியாக தான் இருக்கிறார் நம் உலக நாயகன்.


No comments:

Post a Comment