Wednesday 13 January 2021

கபடி கபடி - மூன்றாம் பாகம்



டிசம்பர் 31 மாலை நான்கு மணி. சுரேஷின் வீட்டின் பின் புறம் இருந்த சிறிய இடத்தில் கபடி மேட்ச் விளையாட இடம் தயார் செய்து இருந்தார்கள். அங்கு சுரேஷும், வில்லியும் காத்துக் கொண்டு இருக்க, வில்லியம்ஸ் ட்ரெயினிங் கொடுத்த மாணவர்கள் இருவரும் அப்போது தான் அங்கு வந்தனர். அதுவரை அங்கு இப்படி ஒரு மேட்ச் நடக்க போவது இருவருக்கும் தெரியாது.

அவர்கள் வந்ததும் கபடி விளையாட போகும் இடத்தை தயார் செய்து கோடுகள் போட்டனர். எல்லாம் முடிந்து கபடி விளையாட போகும் இடம் தயாராகும் வேளையில் என் மனைவி சுபாவும், அவளுடன் ஸ்டெல்லா, ஆயிஷா இருவரும் வந்தனர். மூவரும் மேட்ச் விளையாட தயாராக, டீ-சர்ட், சார்ட்ஸில் வந்தனர். நான் என் மனைவியை ரொம்ப நாளுக்கு பின் ஸ்போர்ட்ஸ் ட்ரஸில் பார்க்கிறேன்.


ஸ்டெல்லா


ஸ்டெல்லா என்னுடைய வகுப்பு தான்.. ஆனாலும் இவள் சுபாவின் ட்ரெயினிங்கில் இருக்கிறாள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்டெல்லா பொசு பொசுவென அம்ரிதா ஐயர் போல இருப்பாள். அடிக்கடி தன் ஹேர் ஸ்டலை மாற்றிக் கொண்டே இருப்பாள். ஐப்ரோ எடுப்பது பேஷியல் என ரொம்பவே தன் தோற்றத்திற்க்காக மெனக்கெடுபவள் ஸ்டெல்லா.. ஆனாலும் அவளுக்கு ஹோம்லி லுக். முதுகுக்கு கீழ் வரை நீண்டு இருந்த கூந்தலை எப்போதும் பின்னலாக ஜடை போடுவாள். ஆனால் மேட்ச் விளையாட போகும் போது உச்சி மண்டையில் கொண்டையாக போட்டுக் கொள்வாள். நம் சராசரி தமிழ் பெண்களை விட கொஞ்சம் உயரம் அதிகம் ஆனவள் ஸ்டெல்லா. 



ஆனால் ஆயிஷா முஸ்லிம் பெண். என்றாலும் பர்தா போடாமல் தான் இருப்பாள். இயற்கையாகவே நல்ல சிவந்த தேகம். கை, கால்களில் கொஞ்சம் பூனை முடி வளர்ந்து மிக கவர்ச்சியாக இருக்கும். குட்டையான ஆனால் அடர்த்தி அதிகமான முடி. குதிரை வால் போட்டு இருந்தாள் தன் குட்டையான முடியை. அகலமான கண்கள். சிறகடிக்கும் இமைகள். வளைவான மூக்கு. அகன்ற தோள்கள். தவறாமல் மூச்சு பயிற்சி செய்து தம் கட்டி கபடி பாடக் கூடியவள்.


ஆயிஷா


அப்புறம் பசங்க இருவரையும் பற்றி சொல்ல வேணுமா? ஒருவன் அசோக், இன்னொருவன் செல்வா.. இருவருமே கோவை மாவட்ட அளவில் சப்-ஜூனியர் லெவலில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்.

எனக்கு, வில்லி, சுபா மூவருக்கும் தான் இந்த போட்டியில் பெண்கள் டீம் தோற்றால் என் மனைவி சுபா மொட்டை அடிக்க வேண்டும் என்ற கண்டிஷன் தெரியும். மற்ற நான்கு பேரும் ஏதோ மேட்ச் விளையாடுகிறோம் என்று நினைத்து தான் விளையாடுகிறார்கள்.

சரி, ரெண்டு டீம் கேப்டனும் வாங்க டாஸ் போடலாம்.. வில்லி கூப்பிட, நானும், சுபாவும் டாஸ் போட சென்றோம். மைதானத்தின் நடுவில் வில்லி ஒரு சேர் போட்டு ரெப்ரியாக உட்கார்ந்து கொள்ள, டாஸ் போட்டோம். நான் தான் டாஸ் ஜெயித்தேன். முதலில் நாங்கள் ரெய்டு போக முடிவு செய்து, செல்வாவை அனுப்பினேன். 

செல்வா கபடி பாடிக் கொண்டே ரெய்டு அடிக்க, ஸ்டெல்லா, ஆயிஷா ஒரு பக்கமும், சுபா ஒரு பக்கமும் நிற்க, தன் சக மாணவிகளை தொட முயற்சி செய்து விட்டு, ஆனால் தொடாமல் வந்துவிட்டான் செல்வா.

அடுத்து ஆயிஷா எங்கள் பக்கம் ரெய்டு வர, அவளை உள்ளே வர விட்டு விளையாட்டு காட்டிக் கொண்டு இருக்க, செல்வா தீடிரென்று ஆயிஷாவின் மீது பாய்ந்து அவளின் வலது காலை பிடிக்க, அசோக் ஆயிஷாவின் இடுப்பை சுற்றி அணைத்து பிடிக்க, ஆயிஷா அவுட். எங்களுக்கு முதல் பாய்ண்ட்.


சுபா


அசோக் ரெய்டு செல்ல, அவன் இலக்கு ஸ்டெல்லா தான். நூலிழையில் ஸ்டெல்லாவை தொட்டு விட்டு திரும்ப, சுபா அசோக்கின் காலை பிடித்துக் கொள்ள, சுதாரித்த ஸ்டெல்லாவும் அசோக்கை பிடிக்க அசோக் அவுட் ஆனான். 

அடுத்த ரெய்டு சுபா வந்தாள். இங்கே எங்கள் அணியில் நானும், செல்வாவும் மட்டும். சுபா நேராக என்னை நோக்கி வர, செல்வா பின்னால் வந்து சுபாவை பிடிக்க முயல, அவன் பிடியில் இருந்து சுலபமாக நழுவினாள் சுபா. இப்போது செல்வாவும் அவுட். 

அடுத்து நான் ரெய்டு செல்ல வேண்டும். மூவரும் நம்பிக்கையுடன் என்னை எதிர்கொள்ள எனக்கு தான் கொஞ்சம் பயமாக இருந்தது. மாணவிகள் இருவரும் ஒன்றாக கை கோர்த்துக் கொண்டு ஒரு மூலைக்கு பின் வாங்க, இன்னொரு மூலையில் அசால்ட்டாக நின்று கொண்டு இருந்தாள் சுபா. நான் என் கவனத்தை சுபாவிடம் திருப்பிய நொடியில், ஸ்டெல்லா என் காலை வாரி விட, நான் கீழே விழ ஆயிஷாவும் என்னை அமுக்கி எழ விடாமல் செய்ய, நான் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், என் கைகளை நீட்டி கோட்டை தொட முயன்று வீச, கைகள் கண்ட கண்ட இடங்களில் பட, மாணவிகளுக்கு கூச்சமாக இருந்தாலும் என்னை விடாமல் அமுக்கி விட்டனர். நானும் அவுட். முதல் சுற்றில் பெண்கள் அணி வெற்றி..

இரண்டாம் சுற்று... இந்த முறை ஆயிஷா ரெய்டு வர, அவள் வேகமாக என்னை நோக்கி வர, என்னை தொட கையை வீசி முயற்சி செய்ய, நான் அவள் கையை பிடித்துக் கொண்டு வேகமாக என் பக்கம் இழுக்க, வந்து என் மேலேயே மோத, செல்வா பின்னால் வந்து ஆயிஷாவை இறுக்கி பிடிக்க, ஆயிஷா அவுட்.



இந்த முறை கொஞ்சம் அதிரடியாக ஆட வேண்டும் என்று நினைத்து அசோக் வேகமாக ரெய்டு செல்ல, நேராக சுபாவிடம் சென்று அவளை சில நொடிகள் பார்த்து விட்டு, திரும்ப, அவன் திரும்பி விட்டான் என்று நினைத்து சுபா, ஸ்டெல்லாவை பார்க்க, அந்த ஒரு நொடியில் சுபாவின் நெஞ்சை தொட்டு விட்டு வேகமாக வந்துவிட்டான் அசோக்..
இப்போது மீதம் இருப்பது ஸ்டெல்லா மட்டுமே.

இந்த பக்கம் நாங்கள் மூவரும் இருக்க, ஸ்டெல்லா கபடி பாடி வந்தாள். அவளுக்கு இந்த நிலைமையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனாலும் அவளுடைய நீண்ட கால்களும், அவள் குதிரை போல ஆடி வந்த வேகமும், எங்களை கொஞ்சம் கவலையடைய செய்ய, நான் துணிந்து ஸ்டெல்லாவின் காலை பிடித்து இழுக்க, செல்வா ஒரு பக்கம், அசோக் ஒரு பக்கம் ஸ்டெல்லாவை பிடிக்க அவளும் அவுட். இரண்டாம் சுற்றில் ஆண்கள் அணி வெற்றி.. இனி மூன்றாம் சுற்றில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள்.

வெல்டன் பாய்ஸ் என்றார் வில்லியம்ஸ். சுபாவின் முகம் பேய் அடித்தது போல இருந்தது. மூவரும் அடுத்த கேம் எப்படி ஜெயிப்பது என்று கூடி பேசினர். ஆனால் நாங்கள் ஜாலியாக இருந்தோம்.

மூன்றாம் சுற்றில் ஆண்கள் அணி தான் ரெய்டு செல்ல வேண்டும். அசோக் கபடி பாடி ரெய்டு போக, பெண்கள் இந்த முறை ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருப்பது தெரிந்தது. அசோக் சுபாவை தொடுவதில் குறியாக இருக்க, மாணவிகள் இருவரும் அசோக்கை பிடிக்க, அவன் விடாமல் கோட்டை தொட முயல, சுபாவும் உதவ அசோக் அவுட்.



ஆயிஷா ரெய்டு வந்தாள். வந்தவள் வேகமாக செல்வாவின் பக்கம் மேலேறி சென்றவள், கொஞ்சமும் தயங்காமல் அவனை எல்லைக் கோடு வரை பின்னால் தள்ளிக் கொண்டு சென்ற ஆயிஷா, செல்வாவின் நெஞ்சின் மீது ஓங்கி அடித்தாள். அவளை விட்டு விட கூடாது என்று நினைத்து செல்வா அவளை பிடிக்க, ஆனாலும் ஆயிஷா தப்பித்து ஓடிவிட்டாள்.

இப்போது நான் மட்டுமே ஆண்கள் அணியில். பெண்கள் அணியில் மூவரும் இருக்க, நான் ரெய்டு சென்றேன். அசோக், செல்வா இருவரையும் அவுட் ஆக்கி விட்டோம் என்ற குஷியில் இருந்த ஸ்டெல்லாவும், ஆயிஷாவும் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நான் ரெய்டு அடிக்கும் போது ஸ்டெல்லா என் குறுக்கே தன் கால்களை விட நான் குப்புற விழ, என் மேலே ஸ்டெல்லா, ஆயிஷா இருவரும் விழ்ந்து அமுக்கு பிடித்து கொண்டு பின்னால் இழுக்க, நான் விடாமல் மூச்சை பிடித்துக் கொண்டு, நடுக்கோட்டை நோக்கி இரு பெண்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு நகர, நடுக்கோட்டை நெருங்கி விடும் தூரத்தில் நான் இருக்க ஸ்டெல்லா கத்தினாள். 

சுபா மேடம், சாரோட கையை பிடிங்க, கோட்டை தொட விடாதீங்க...!



அதுவரை சுபா சற்று ஜாக்கிரதையாகவே இருந்தாள். ஒரு வேளை சுபாவும் என்னை தடுக்க முயன்று என்னை தொட்டு விட்ட பின், நான் நடுக்கோட்டை தொட்டு விட்டால் பெண்கள் டீம் தோற்றுவிடும் என்று நினைத்து சுபா தள்ளி நிற்க, ஸ்டெல்லா அப்படி கத்தியதும், கையை பிடித்தால் போதும் என்ற பதட்டத்தில் என் இடது கையை சுபா பிடிக்க, அதே நொடியில் நான் என் வலது கையால் நடுக்கோட்டை தொட்டு விட்டேன்..

பெண்கள் அணி மொத்தமும் அவுட். சுபா அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள். அவ்வளவு பொறுமையாக இருந்தும் கடைசி நொடியில் பதட்டத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தோற்றுவிட்டாள்.

அசோக்கும், செல்வாவும் என்னை தூக்கி வைத்து கொண்டாடினர். பெண்கள் மூவரும் சோர்ந்து போய் உட்கார்ந்து இருக்க, வில்லியம்ஸ் ஷீல்டை எடுத்துக் கொண்டு வந்தார்..

என்ன சுபா மேடம்.. இப்போ ஒத்துக்கீறீங்களா? பாய்ஸ் தான் எப்பவும் டாப்னு.. இந்தாங்க உங்க கையாலேயே இந்த ஷீல்டை அவங்களுக்கு கொடுங்க!

சுபாவும் ஷீல்டை வில்லியம்ஸிடம் இருந்து வாங்கி கொடுக்க, அதை அசோக்கும், செல்வாவும் வாங்கிக் கொண்டனர். பின் சில நிமிடங்கள் கொண்டாட்டமாக போக, எல்லோரும் சுரேஷின் வீட்டுக்கு சென்று காபி ஸ்னாக்ஸ் சாப்பிட்டனர். 

இப்போது சுபா என்ன செய்வாள்? தான் ஒத்துக் கொண்ட படி போட்டியில் தோற்றதற்காக தான் இத்தனை வருடங்களாக ஆசையாக வளர்த்த முடியை மொட்டை அடித்துக் கொள்வளா? அல்லது முடியாது என்று சொல்வாளா? 

***********************************************************************************


நண்பர்களே.. கதை கற்பனை மட்டுமே.. பெண்கள் ஆண்களை விட பலசாலிகளே. அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நிருபித்து கொண்டு வருகிறார்கள். இந்த கதை எழுதும் போது கூட பெண்கள் இடையில் எங்கும் நிற்காமல் நீண்ட தூரம் விமானத்தை இயக்கியதும், இந்தியாவில் முதல் முறையாக பெண்கள் சரக்கு ரயிலை தனியாக இயக்கிய செய்தியும் வெளியாகியது. அதனால் கதைக்காக மட்டுமே போட்டியில் தோற்றதை போல எழுதி இருக்கிறோம். 

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்...!

 






No comments:

Post a Comment