Thursday 3 June 2021

அன்புக்கு அபிதா - இரண்டாம் பாகம்

பர்ஸில் இருந்த பணத்தை பார்த்த அபிதா தான் எவ்வளவு பெரிய தப்பு செய்து விட்டோம் என்று நினைத்துப் பார்த்தாள். ஜெகன் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவனை எல்லோர் முன்பும் அடித்துக் கேவலமாகப் பேசி அவமானப் படுத்தியதை எண்ணி வருந்தினாள்.


உடனே அவளுடைய க்ளாஸை நோக்கி ஓடினாள். க்ளாஸில் ஜெகன் இல்லை. இந்த இடைப்பட்ட சில நாட்களில் ஜெகன் க்ளாஸ்க்கு வரவும் இல்லை. அதுக்கூட தெரியாமல் இருந்தாள் அபிதா. மூச்சு வாங்கிக் கொண்டு ஓடி வந்த அபிதாவை க்ளாஸில் இருந்த சக மாணவர்கள் என்னவென்று கேட்க, அவள் ஜெகனை பற்றி விசாரித்தாள்.



அபிதா, அவன் தான் அன்னிக்கு அடி வாங்குனதுல இருந்தே க்ளாஸ் வரலையே?

அவன் எங்க தங்கி இருக்கான்? யாருக்காவது தெரியுமா?

ம்ம்ம். ஒரு ரூம் எடுத்துத் தான் தங்கி இருக்கான்... நான் ஒரு தடவை பார்த்து இருக்கேன்...


சரி அப்போ வாடாப் போகலாம்... என்று அவனைக் கூட்டிக் கொண்டு அபிதா போக, அவளை எல்லோரும் வினோதமாகப் பார்த்தனர். சில நிமிடங்களில் ஜெகன் தங்கி இருந்த இடத்திற்க்கு சென்றனர். அது ஒரு சேரி போன்ற ஏரியா. ஒரு மாடி வீட்டின் மேல் சின்னக் கூரை போட்டு இருந்த ரூமில் தான் ஜெகன் தனியாகத் தங்கி இருந்தான். 

அபிதாவுடன் வந்தவன் அந்த இடத்தில் கால் வைக்கவே அருவருப்பாக, அபிதா அதைப் பற்றிக் கவலைப்படாமல் வேகமாக மாடியில் ஏறி, ரூம் கதவைத் தட்டினாள். தூங்கிக் கொண்டு இருந்த ஜெகன் வந்து கதவைத் திறந்து, வெளியே நின்ற அபிதாவை பார்த்தான். 

வாங்க அபிதா...

என்ன ஜெகன்... உடம்புக்கு என்ன?

காய்ச்சல் தான், அதான் க்ளாஸ் வரலை...

ஓ... ஸாரி ஜெகன், நீ எவ்ளோ சொல்லியும் கேட்காம நான் உன்னை அடிச்சிட்டேன்... என் பர்ஸை நீ எடுக்கலன்னு எனக்கு இன்னிக்கு காலைல தான் தெரிஞ்சது... அது என் கார்லயே மிஸ் ஆகிடுச்சு... என்னை மன்னிச்சிடு ஜெகன்... 

மன்னிப்பு கேட்டு இனி என்ன ஆகப் போகுது? விடுங்க...

இல்ல ஜெகன்... உன் பணத்தை நான் திருப்பிக் கொடுத்துடறேன்... காலேஜ்ல எல்லார் முன்னாடியும் உங்கிட்ட மன்னிப்பு கேட்குறேன்... ஜெகன் வெரி ஸாரி...

பரவாயில்லை விடுங்க...

சரி வா...   போகலாம்...

எங்க...

டாக்டர்கிட்ட... காய்ச்சல்னு சொன்னல்ல... 

இல்லங்க அதெல்லாம் வேண்டாம்... 

ஏய் வாடா...  போலாம்... நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டதும் என் மேல இருந்த பயம் விட்டுப் போச்சா?

அய்யோ அப்படி இல்ல... 

சரி சரி லேட் பண்ணாம கிளம்பு நான் கீழ வெய்ட் பண்றேன் என்று சொல்லி விட்டு அபிதா கீழே வர, சில நிமிடங்களில் ஜெகனும் ரெடியாகி வர, இருவரும் ஆட்டோ பிடித்து வந்தார்கள். மணி மதியம் 12 க்கு மேல் ஆகி இருக்க, ஒரு ஹோட்டல் முன் நிறுத்தச் சொன்னாள் அபிதா. அவள் இறங்கி ஹோட்டலுக்கு செல்ல, ஜெகன் ஆட்டோவிலேயே இருக்க... அவனை அதட்டி கூப்பிட்டாள் அபிதா. 



உடனே அவளுடன் போனான் ஜெகன். இருவரும் நன்றாகச் சாப்பிட்டனர். ஜெகன் பசியோடு இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு அவனுக்கு நிறைய வாங்கி தந்தாள் அபிதா. பின் டாக்டரைப் பார்த்து விட்டுக் காலேஜ் வந்தனர். காலேஜில் அபிதா சொன்னதை போலவே நடந்ததை சொல்லி எல்லோர் முன்பும் ஜெகனிடம் மன்னிப்பு கேட்டாள். அவன் தன் பணத்தை திருடவில்லை என்றும், தான் தவறாக நினைத்து விட்டதையும் கூறி அவனை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் கூறினாள்.

பின் இருவரும் காலேஜ் விட்டு வந்ததும் அவனைப் பற்றியும், அவன் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தாள். ஜெகன் பார்ட் டைமாக ஒரு பாஸ்ட் புட் கடையில் வேலை செய்வதாகவும் சொன்னான். அவனின் நிலைமையை அறிந்த அபிதா அவனுடன் நட்புடன் இருக்க ஆரம்பித்தாள்.

ஸாரிடா, ஜெகன் நான் உன் நிலைமை புரியாம கஷ்டப் படுத்திட்டேன்... நான் வளர்ந்த விதம் அப்படி ஜெகன்... எனக்கு ப்ரெண்ட்ஸ் கூட யாருமில்ல... இனிமே நாம ரெண்டு பேரும் நல்லா ப்ரெண்ட்ஸ்ஸா இருப்போம்… சரியா?

சரிங்க?

டேய் ப்ரெண்ட்ட வாங்க போங்கன்னு சொல்லக் கூடாதுடா?

அப்போ எப்படி கூப்பிட?

என் அப்பா, அம்மா அபிதான்னு அழகா பேர் வச்சு இருக்காங்க... அந்தப் பேர் சொல்லிக் கூப்பிடு...

சரி அபிதா...!


அந்த நாள் முதல் அபிதா ஜெகனுடன் நட்பாகப் பழக ஆரம்பித்தாள். அவனின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்தாள். அவனுக்கு வேண்டிய ட்ரஸ், புக்ஸ் என வாங்கிக் கொடுத்தாள். நல்ல ஹோட்டலில் தினமும் சாப்பிட ஏற்பாடு செய்தாள். ஒரு நல்ல வீட்டை அவன் தங்க வாடகைக்கு பிடித்துக் கொடுத்தாள்.

இருவரும் காலேஜில் நட்பாகச் சுற்ற, யாருடனும் பேசாத அபிதா அவனிடம் நெருக்கமாகப் பழகுவதை பார்த்து, காலேஜில் எல்லோரும் அபிதா, ஜெகன் இருவரும் காதலிப்பதாக நினைத்து, அதை ஜெகனிடமும் சில பேர் கேட்க, அவன் நட்பு மட்டும் தான் என்று சொன்னான்.

டேய், ஜெகன்...

என்ன அபி...

நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றதா காலேஜ்ல ஒரு ரூமர் இருக்கு... உனக்குத் தெரியுமா?

தெரியுமே? எங்கிட்ட கூடச் சில பேர் கேட்டாங்க...

என்னனு... 

நீயும் அபிதாவும் லவ் பண்றீங்களான்னு....

அதுக்கு நீ என்ன சொன்னடா?

நான் என்ன சொல்றது? எனக்கு அபிதா நிறைய ஹெல்ப் பண்றா... அவ தயவுல தான் என் வாழ்க்கையே ஓடிட்டு இருக்கு... எனக்கும், அபிதாவுக்கும் நல்ல நட்பு மட்டும் தான்னு சொன்னேன்...

ம்ம்ம்ம்... அதாண்டா எனக்கு உன்னைப் பிடிச்சு இருக்கு... இதே வேற மாதிரி பையனா இருந்தா இந்நேரம் என் கற்புக்கு கியாரண்டி இல்லை....

அய்யோ என்ன அபி சொல்ற... நான் அந்த மாதிரிப் பையன் இல்ல... என்று ஜெகன் பதற...

டேய்... டேய் அடங்குடா... நீ அப்படி இல்லன்னு இந்த ஊருக்கே தெரியும்... ஏன்னா நீ அந்த வேலைக்குச் சரிப்பட்டு வரமாட்ட...

பார்த்தியா அபி... நீ என்ன கிண்டல் பண்ற...

சும்மா விளையாட்டுக்குடா... சரிடா ஜெகன்... என் கூட இவ்ளோ நாள் பழகுற... எங்கிட்ட ஏதாவது பிடிச்சு இருக்கா...

ம்ம்ம்... பிடிச்சு இருக்கே... 

என்னடா பிடிச்சு இருக்கு... சொல்லு?

மைப்போட்டு இருக்க கண்ணு... அப்புறம்... துறுதுறுன்னு இருக்கிறது... அப்பப்போ என்னை ஓட்டுறது...ரெகார்ட் எழுதாம என்னை எழுத வைக்கிறது... அப்புறம் உன்னோட திமிர் ரொம்ப பிடிக்கும்... ஆனா அதை இப்போ நான் பாக்கவே முடியல...


அப்புறம் வேறென்ன...

அது வந்து.... சொன்னா கோச்சுக்க மாட்டியே...

சும்மா சொல்லுடா...

உன்னோட இந்த நீளமான முடி ரொம்ப பிடிக்கும்... அதைத் தொட்டு பார்க்க ஆசையா இருக்கும்... ஆனா நீ திட்டுவியோன்னு தொட மாட்டேன்... 

இது என்னடா புதுசா இருக்கு... பொண்ணோட முடிய தொட்டு பார்க்க ஆசை படுறது... 

எல்லா பொண்ணுக முடியும் இல்ல... உன் முடியை மட்டும் தொட்டு பார்க்க ஆசையா இருக்கும்னு தான் சொன்னேன்... அபி ஒரு தடவை தொட்டு பார்த்துக்கவா?

ஏண்டா...  அவனவன் என்னென்னமோ ஆசை படுறான்... நீ என்னடான்னா? சரி தொட்டு பார்த்துக்கோ...

ஜெகன் அபிதாவின் முடியை ஆசையாகத் தொட்டு தடவி பார்த்தான். அபிதா அன்று காலைத் தலை குளித்து விட்டு, ஒரு க்ளிப் மட்டும் போட்டு ப்ரீயாக விட்டு இருந்தாள். அதனால் அவளுடைய நீளமான முடியை அவனுடைய இஷ்டம் போலத் தொட்டு தடவி பார்த்தான். அவளுடைய முடியைக் கொத்தாகப் பிடித்துக் கைகளில் சுற்றி தன் முகத்தின் மீது தடவினான்.


பின் அபிதாவின் அடர்த்தியான முடியை மூன்றாகப் பிரித்து மெதுவாக அவளுக்கு மிக நேர்த்தியாக ஜடை பின்னி விட்டான். ஜடை பின்னியதும் அபிதாவிடம் காட்டினான்.

டேய் ஜெகா சூப்பர்டா... என் அம்மாவைவிட நல்லா ஜடை பின்னி விட்டு இருக்கடா?

ம்ம்ம்ம்…தேங்க்ஸ்.

அன்றிலிருந்து அடிக்கடி அபிதாவின் முடியை, அவர்கள் இருவர் மட்டும் இருக்கும்போது தடவிப் பார்த்தான். ஒரு நாள் ஜெகனின் அம்மா உடல் நிலை சரியில்லை என்று தகவல் வர, அபிதா அவனைத் தன் காரில் கூட்டிச் சென்றாள். ஜெகனின் கிராமத்தில் அவனுடைய அம்மாவுக்கு வேண்டிய உதவிகள் செய்து விட்டு, அபிதா மட்டும் வந்து விட, ஜெகன் சில நாட்கள் அவன் அம்மாவுக்கு உதவியாக இருந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டான்.

ஜெகன் இல்லாமல் அபிதா மட்டும் காலேஜில் தனியாக இருந்தாள். அந்தச் சில நாட்கள் ஜெகன் இல்லாதது அவளுடைய மனதை ஏதோ செய்தது. இரண்டு வாரங்கள் கழித்து காலேஜ் வந்து சேர்ந்தான் ஜெகன். அன்று காலை வந்ததும் ஜெகன் அபிதாவுக்கு கால் செய்து தான் வந்து விட்டதாகச் சொல்ல உடனடியாக அவன் தங்கி இருந்த ரூமுக்கு சென்றாள் அபிதா.

ஜெகனை பார்த்ததும் என்றும் இல்லாமல் அபிதா அவனை ஓடிப்போய்க் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். அவன் முகம் எங்கும் முத்தமிட்டாள்.


ஏய் அபி... என்ன இது?

ஜெகன் என்னால நீ இல்லாம இருக்க முடியாதுடா! நீ இல்லாத இந்த ரெண்டு வாரமும் நான் நானாவே இல்லடா? ஐ லவ் யூ ஜெகன்... ஐ லவ் யூ...  ச்சோ மச்...

அபி... ப்ளீஸ்... இப்போ என்னாச்சு... ஏன் உணர்ச்சி வசப்படுற... நமக்குள்ள இருக்கிறது நல்ல நட்பு மட்டும் தான்... 

நோ டா ஜெகன்... எனக்குள்ள லவ் இருக்கு... நான்  அதைப் புரிஞ்சுகிட்டேன்... உனக்கும் என் மேல லவ் இருக்கு... ஆனா நீ சொல்ல மாட்ட... 

இல்ல அபி... நான் என்ன சொல்றேன்னா... அவன் சொல்லிக் கொண்டே இருக்க, அவனை இழுத்து பிடித்து அவனுடைய உதட்டைக் கவ்வி முத்தமிட்டாள் அபிதா... அப்படியே ஆப் ஆகி விட்டான் ஜெகன். இனி அவன் இந்த வலையிலிருந்து தப்பிக்க முடியாது...!!!







1 comment:

  1. சூப்பர் நண்பா நான் நினைத்ததை விட நீங்கள் இந்த கதையை கொண்டு செல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்களின் அடுத்தடுத்த பதிவுக்காக நான் மிகவும் ஆவலுடன் தினமும் காத்திருக்கிறேன் நண்பா ஒரு சிறு கோரிக்கை நீங்கள் எழுதி என் மனதை கவர்ந்த கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது காயத்திரி கதையும் பிறகு பிரியாவின் திருமண கதையும்தான் அது எப்பொழுது வரும் என்று நான் தெரிந்து கொள்ளலாமா

    ReplyDelete